வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஆபரேஷன் சமோசா' கனடா போலீசார் நேற்று ் கைது செய்து தீவிர

ஆபரேஷன் சமோசா' என்ற பெயரில் கனடாவில் பயங்கர நாச வேலைக்கு சதி: இந்தியர் உள்பட அல்கொய்தா தீவிரவாதிகள் 2 பேர் கைது
கனடாவில் `ஆபரேஷன் சமோசா' என்ற பெயரில், பயங்கர நாச வேலைக்கு சதி செய்ததாக, இந்தியர் உள்பட அல்கொய்தா தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவை சேர்ந்த மிஸ்பாஹூதீன் (வயது 36), கனடாவில் ஒட்டாவா நகரில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வந்தார். அவரது நண்பர் அகமது ஈஷன்.

இவர்கள் இருவரையும் கனடா நாட்டு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்பதும், `ஆபரேஷன் சமோசா' என்ற பெயரில் கனடாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்மிட்டர் நிலையங்களை குண்டு வைத்து அழிக்க, கடந்த 2 ஆண்டுகளாக சதி செய்து வந்ததும் தெரிய வந்தது.

அவர்களின் வீடுகளில் இருந்து சில கம்ப்ïட்டர்கள், ஒரு வாகனம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்
இது குறித்து கனடா நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- கைதான மிஸ்பாஹூதீன், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர். இந்த சதிக்கு அவர்தான் தலைவராக செயல்பட்டு இருக்கிறார்.

கனடா நாட்டில் இருந்துதான் அமெரிக்காவுக்கு மின்சாரம் செல்கிறது. இங்கு மின்உற்பத்தி நிலையங்களை அழித்து, அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களுடைய குறிக்கோள்.

கனடா நாட்டில் இருந்து கொண்டே அமெரிக்காவுக்குள் செல்லவும், அங்கும் நாசவேலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். கைதான 2 தீவிரவாதிகளும் வெளிநாடுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்தனர். அதற்குள் அவர்களை கைது செய்து விட்டோம். அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம்.

இவ்வாறு செய்தி தொடர்பாளர் கூறினார்.
கைதான மிஸ்பாஹூதீனுக்கு, வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்த கனடா நாட்டின் தூதரக முன்னாள் அதிகாரி ராபர்ட் பேரல் இது பற்றி கூறுகையில், "மிஸ்பாஹூதீன், திருமணம் ஆனவர். அவர் தனது மனைவியுடன் வந்து வாடகைக்கு குடியிருக்க வீடு கேட்டார். அவரது மனைவி பர்தா அணிந்து இருந்தார். நீண்ட நாட்களாக சவுதி அரேபியாவில் வசித்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்'' என்றார்.

ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் கனடாவில் நாசவேலையில் ஈடுபட முயன்ற சதி முறியடிக்கப்பட்டு, 18 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக