வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தமிழ் குழந்தை குஞ்சுகளுக்குக் கூடத் தெரியும். இது பற்றி தமிழ்

அகதி என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!
புலி என்று சொல்லாதேடா! புலம் திரும்பி போகாதேடா!!
கப்பலில் வருவதில் புலிகளும் இருக்கிறார்கள் என்பதை உலகில் உள்ள அநேகமான தமிழ்மக்களும் அறிந்துள்ளார்கள். ஆனால் யாருமே உண்மையைச் சொல்லமாட்டார்கள். தமிழ்மக்கள் மட்டுமல்ல அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் உண்மையைச் சொல்லமாட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் உலகின் பிரபல்யமான மனித உரிமை அமைப்புக்களும் உண்மையை மறைப்பது தான். 
கனடா நோக்கி செல்கின்ற இலங்கை அகதிகளுடனான படகு தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க அமெரிக்காவில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுப்பு தெரிவிப்பதாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் தமது பெயரைக்குறிப்பிட விரும்பாத இலங்கை தமிழர் ஒருவர் அந்த கப்பல் குறித்த தகவல் அறிந்திருப்பதாகவும் எனினும் தமது உறவினர் எவரும் இல்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே வந்தாலும் ஒருவரும் அதனை உறுதிப்படுத்த மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆள் கடத்தல் வியாபாரத்திலும், தூள் கடத்தல் வியாபாரத்திலும் உலகின் நம்பர் 1 என்ற நிலையில் கடந்த பல வருடங்களாகப் புலிகளே இருந்து வந்தனர். 2009 மே மாதாத்தின் பின்னர் இந்த நிலையில் சற்று இறங்குமுகம் காணப்படுகிறது. இந்தக் கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்வது தமிழிழ விடுதலைப் புலிகள் தான் என்று தமிழ் குழந்தை குஞ்சுகளுக்குக் கூடத் தெரியும். இது பற்றி தமிழ் காங்கிரஸ் காரர்களுக்கும், தமிழர் பேரவைக்காரர்களுக்கும், நாடுகடந்த தமிழீழக்காரர்களுக்கும் எதுவுமே தெரியாதாம்.  ஆனால் அதில் எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள் வருகிறார்கள் என்பது இந்தப் புலிப் பினாமிகளுக்குத் தெரிந்திருக்கிறது.
இந்தக் கப்பல்களில் பயணிப்போரில் அரைப்பங்கினர் புலிகள். மிகுதியானவர்கள் வெளி நாடு போகவென அங்கங்கே காத்திருந்த பொதுமக்கள். இந்தப் பொதுமக்களிடம் பிரயாணத்துக்காக பெருந்தொகைப் பணம் புலி முகவர்களால் அறவிடப்படுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன் கேரளாவில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும், இதற்காக ஒவ்வொருவரிடமும் பெரும்தொகைப் பணத்தினை அறவிட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இந்த கப்பல் குறித்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் ஜே கிரௌலியிடம் இந்த கப்பல் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதன் போது தகவல் தெரிவித்த க்ரௌலி எம் வீ சன் சீ என்ற இந்த கப்பல் அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
(செய்திகளின் அடிப்படையில் ஆக்கம் - சமரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக