வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பை, பயோமெட்ரிக் முறையில் விவகாரத்தில் அமளி : மத்திய அரசுக்கு

ஜாதிவாரி கணக்கெடுப்பை, பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், லோக்சபாவில் நேற்று அமளி நிலவியது. இதனால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இருந்தாலும், பயோ மெட்ரிக் உட்பட எந்த முறையில் கணக்கெடுப்பை நடத்துவது என்பது போன்ற விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என, மத்திய அரசு கூறியுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க அமைக்கப் பட்ட மத்திய அமைச்சர்கள் குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இதில், பயோமெட்ரிக் முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், நேற்று காலை லோக்சபா துவங்கியதும், "கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது' என, யாதவ தலைவர்களான சரத் யாதவ், முலாயம் சிங், லாலு பிரசாத் உள்ளிட்டோர் குரல் எழுப்பினர்.

சரத் யாதவ் பேசும்போது, ""அடையாள அட்டை திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது
டில்லி போன்ற வளர்ச்சியடைந்த நகரத்தில் கூட அடையாள அட்டை திட்டத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நிலைமை இப்படியிருக்க, பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு என்ற அரசின் முடிவு, உயர் ஜாதிக்காரர்களின் சதி போல தெரிகிறது. ""பயோ மெட்ரிக் முறையில் நடத்துவது என்றால், நூறு ஆண்டுகள் ஆனாலும் நடக்காது. எனவே, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்,'' என்று கோரினார். இதற்கு முலாயமும், லாலுவும் ஆதரவு தெரிவித்ததால், சபையில் அமளி நிலவியது.

இந்த நேரத்தில், சுதிப் பந்தோபாத்யாய் தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, "சில நாட்களுக்கு முன், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை கொல்ல முயன்றது பற்றி விவாதிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். இந்த விவகாரங்களால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவவே, சபையை மதியம் வரைக்கும் ஒத்திவைத்தார் சபாநாயகர் மீரா குமார். சபை ஒத்திவைக்கப்பட்ட உடன், லாலு பிரசாத், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோருடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், ""மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி துவங்கியது. இப்பணியின் இரண்டாவது கட்டமாக, வரும் நவம்பரில், பயோ மெட்ரிக் முறையில், 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரின் புகைப்படங்கள் மற்றும் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி நடக்கும். ""இதற்காக நாடு முழுவதும் முகாம்கள் அமைக்கப்படும். அந்த இரண்டாவது கட்ட பணியின் போது, ஒவ்வொரு நபரின் ஜாதியையும் சேர்க்க அரசு விரும்புகிறது. இதைத்தான் மத்திய அமைச்சர்கள் குழு மத்திய அமைச்சரவைக்கு சிபாரிசு செய்துள்ளது,'' என்றார். இதில், தலைவர்கள் பலரும் திருப்தி அடைந்தனர்.

பின்னர் மீண்டும் சபை கூடியபோது அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், ""ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சர்கள் குழு கூடி முடிவெடுத்துள்ளது. இது ஒன்றும் இறுதி முடிவல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான வழி முறைகளை மத்திய அமைச்சரவை தான் இறுதி செய்யும். ""அப்போது, பயோ மெட்ரிக் அடிப்படையில் மேற்கொள்வது உட்பட, பல வழிகளும் ஆராயப்படும். இங்கே எம்.பி.,க்களும் சில யோசனைகள் கூறியுள்ளனர். அதையும் அமைச்சர்கள் குழு ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். அதன்பிறகு தீர்க்கமான முடிவுடன் திரும்பவும் இந்த சபைக்கு வந்து விளக்கமளிக்கப்படும். அதுவரை சபையை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்து அலுவல்கள் சுமுகமாக நடந்தன.

முத்துக்குமார் - சென்னை.கோடம்பாக்கம்,இந்தியா
2010-08-13 17:53:21 IST
முண்டாசு கவி பாரதி இன்று இருந்திருந்தால் ரத்த கண்ணீர் விட்டு, நெஞ்சம் பொறுக்கவில்லை என்ற பாடலை மீண்டும் பாடி இருப்பர்....
ஜெயராம் முத்து - அபுதாபி,யுனைடெட் கிங்டம்
2010-08-13 16:47:16 IST
சாதிகள் இல்லையடி பாப்பா!! குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!! ன்னு சொன்ன நம் மகாகவியோட வார்த்தைகளை மறந்து நம் தாய் திருநாடு எங்கு போய்க்கொடிருக்கிறது??? சாதி வாரிய கனகெடுப்பினால், என் சாதி மக்களோட எண்ணிக்கை குறைவா இருக்குன்னு, மக்கள் தொகைய பெருக்குவாங்க. அதனால நாட்டுக்கு இன்னொரு தலைவலி மக்கள் தொகைய கட்டுப்படுத்துறதுல. நம்ம நாட்டில முன்னேற்றம் கொண்டுவர வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு. குழந்தைகளுக்கு உலகத்தர கல்வி, மக்களுக்கு விபத்துக்கள் இல்லாத சாலை போக்குவரத்து, எல்லோருக்கும் தரமான உணவு, பொது மக்களுக்கு தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சரியான வேலைவாய்ப்புக்களை புதிய தொழில்துறைகள் மூலம் உருவாக்குதல், முக்கியமாக ஊழலை கட்டுப்படுத்த சிறுவயது முதல் கல்வி முறை, இதுபோன்ற இன்னும் பட்டியல் நிறைய நீண்டுகொண்டிருக்கு. பொறுப்பில் இருக்கும் மக்களால் தேர்தெடுக்கப்படிருக்கும் நல்ல தலைவர்கள் செய்வார்களா? நம்பிக்கையுடன்......
ஒ.dharmu - tiruchi,இந்தியா
2010-08-13 15:52:12 IST
jathikal illaiyadinu schoolla padam nadathi puttu, jathiya pottri pukaltrathu nattu nallathukku illa. araciyal la vottukku romba use aavum. makkkal ellalam oruthara oruthar adusukittu saga melum valu seyrkkum. ethu nallathukku illa . amathi irukkathu . ithuva valgai....
Arun - tirupur,இந்தியா
2010-08-13 15:50:56 IST
எங்கே நம்ம பாரதி?.. எங்கே நம்ம மனிதன் ?.ஜாதிகள் இல்லையடி பாப்பா! குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! .எவளவோ பிரச்சனை நாட்டுல இருக்கு அதை கவனிங்கப்பா ...............
Sr . சமூகம் - திருச்சி,இந்தியா
2010-08-13 15:32:28 IST
இந்தியால கையெழுத்து கூட போட தெரியாதவங்க எத்தனை சதவீத மக்கள் இருக்காங்க....தெரியுமா மடப்பயலுகளா.... அவங்ககிட்டயும் கைரேகைய உருட்டி சொத்து வில்லங்க திலாலங்கடிக்கு வழி பண்றானுங்க.... மேலேர்ந்து கீழ் வரைக்கும் கெட்டுப்போன சமூகத்துல இந்தமாதிரி ஒரு கைரேகை பட்டியல் கெடைச்சா.... கைரேகைய பதிஞ்சு பத்திரம் வைத்திருப்பவன் கதியெல்லாம் அம்பேல்தான்....சாக்கறதை....வேணுமினா கால் ரேகை இல்லாட்டி கண்விழி முறையை பயன்படுத்திக்க.......
Bhargav - Bhilai,இந்தியா
2010-08-13 14:35:28 IST
அட முட்டாள்கள ஜாதி ஒழிய வேண்டும் என்றல் நீங்கள் 80௦ வருடம் பின்ன போறங்கள,ராமதாஸ்,முலாயம்,லாலு...
Bala - Thanjavur,இந்தியா
2010-08-13 14:00:38 IST
ரங்கச்சார்யா - USA -வாய்யா..வா. இந்தியால மக்கள் வரி பணத்துல படிச்சுட்டு நீங்க எல்லாம் போய் USA ல உக்காந்துண்டு வாய்கிழிய பேசுற? இந்தியாக்கு நீ எல்லாம் என்ன செஞ்சு இருக்கேள்?...
ரங்கச்சர்யா - USA,இந்தியா
2010-08-13 12:44:56 IST
வாசகர்களே, குய்யோ முய்யோ என்று கத்தும் உங்களில் எத்தனை பேர் உங்கள் ஜாதிக்கு வெளியில் திருமணம் செய்துள்ளீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள்? அல்லது உங்கள் பிள்ளைகளை செய்யவிடுவீர்கள் ? இல்லை என்று சொல்வீர்களானால் நீங்கள் ஜாதியை கடைபிடிப்பவரே !!! ஜாதியை ஒழிக்க உண்மையான அக்கறை இருந்தால் அதை செய்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!! ஜாதியை ஒழிக்க முடியாவிட்டாலும் சாதிகளுக்கிடையே ஒரு சமூக சம நீதி கிடைக்க வழி வகை செய்யும் இந்த ஜாதிவாரிய கணக்கெடுப்பு! -ரங்காச்சர்யா...
முரகன் - Madras,இந்தியா
2010-08-13 11:38:44 IST
நல்ல முடிவு. சீக்கிரம் தொடங்கி சீக்கிரம் முடியுங்கள். அப்போதான் எந்தனை மேல் சாதி காரன் அரசு வரிபணத்தில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கான் என தெரியும். அப்புறம் மம்தா ரயில்வே இல் விரல் ரேகை முறை வருகை பதிவு எப்போது...
kp.raja - mysore,இந்தியா
2010-08-13 11:37:37 IST
dear sir, the upper caste people do not want caste cencus, but the want caste system....
raaki - Chennai,இந்தியா
2010-08-13 11:34:58 IST
"குலத்தாழ்ச்சி உயற்சி சொல்லல் பாவம்" என்று பாடியதற்காக பாரதியை வெளியேற்றிய மேதைகள், இன்னும் சாதி விடாமல் இறுக்கமாக கயிறுகட்டி பிடித்து கொண்டிருக்க, மூதைகளான மற்றவர்களும் பிடித்துகொண்டு இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? அவாளுக்கு இவாளென்ன மட்டமோ? மூதைகளுக்கும் இதன் தொலைநுணுக்கங்கள் புரிந்ததின் விளைவே இந்த எதிர் நிலைப்பாடு....
விஜய் - சென்னை,இந்தியா
2010-08-13 11:24:46 IST
பயோமெட்ரிக் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவை வீணடிப்பது...
கதிரவன் - MUMBAI,இந்தியா
2010-08-13 10:44:52 IST
ஜாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் காங்கிரஸ் அரசே முன்வந்து செய்யவில்லை. ப ஜ க உள்பட எல்லா அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொண்டதன்மூலம்தான் காங்கிரஸ் செயல்படுத்துகிறது. காங்கிரசுக்குள்ளேயே இதில் இரு வேறு கருத்துக்கள் இருந்து விவாதம் நடைபெற்றதை அனைவரும் அறிவர். "துரதிஷ்டவசமான அரசியல் நிர்பந்தம்" காரணமாக கெட்ட செயல் செய்வதில் காங்கிரஸ் கடைசி கட்சியாகத்தான் உள்ளது. என்ன...., அதையே கொஞ்சம் துல்லியமாக ஆள்மாராட்டத்திற்கு இடமளிக்காமல் ' BIOMETRIC ' முறைப்படி செயல்படுத்த விரும்புகிறது. அதற்கு இவ்வளவு ஆர்பாட்டம்....
kishore - chennai,இந்தியா
2010-08-13 10:42:00 IST
our country is never going to develop in infrastructure, education, rural development and in all cases congress doesnt have any potential to face problems please mr. singh save our generation freee from caste polticis. jai hind...
Muthu - Coimbatore,இந்தியா
2010-08-13 10:23:41 IST
Yes Mr.Kaipula, politics man action is very bad. we won't like caste....
D.சேகர் செல்வராஜ் - தூத்துக்குடி,இந்தியா
2010-08-13 10:15:48 IST
பயோ மெட்ரிக் முறை என்றால் என்ன என்று தெரியாமல் பாராளுமன்றத்தில் கூச்சல் போடுவதும், பின்னர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் தனியே அழைத்து விளக்கம் சொன்ன பிறகு திருப்தி அடைந்தார்களாம். ஒரு விஷயம் என்ன என்றே புரியாமல் குழப்பம் விளைவித்து பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கும் இவர்களை போன்றவர்களும், தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்கவேண்டும் என பேசும் டாக்டர்.ராமதாஸ் போன்றவர்களும் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்வதிலிருந்து, இவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று புரியவில்லையா. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிற அரசியல்வாதிகள், ஜாதிவெறியை தூண்டி அரசியல் நடத்ததான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும். வேறு ஒன்றுக்கும் பயன்படாது. இதில் உயர்ஜாதி சதி என்று வேறு சொல்லுவதுதான் வேடிக்கையாக உள்ளது....
edwin - egypt,இந்தியா
2010-08-13 09:35:36 IST
Politicians are become mad and animals. what you are going to achieve after taking account of cencus by caste. No use. Take account of population, how many are educated, uneducated, employed, unemployed, economy status and do planning for improving life of poors and others. why caste necessary. Few politicians run the business by caste politics. These people has to be vanished from politics. Leaders from politics must think how to develop our country. here these people are trying to take us 5000years back. Be shame. Dear friends pray not to born in india any more unless this politicians are dyed we cannot march forward. Will go backward only. jai hind. Vazhga BHARATAM....
S.Ravikumar - Vellore,இந்தியா
2010-08-13 09:20:04 IST
எப்படி செயல் படுத்த போகிறார்கள்?இரண்டு வாரத்திற்கு முன்பு எங்கள் பகுதில் முன்று தெருக்களை அடியோடு விட்டு விட்டு மக்கள் தொகை கணக்கு எடுப்பு முடித்துவிட்டார்கள். எதை செய்தாலும் அதில் ஒழுங்கு இருக்காது....
hari - chennai,இந்தியா
2010-08-13 08:27:10 IST
இதெல்லாம் ஓர் பொழப்பா...
இந்தியன் - சென்னை,இந்தியா
2010-08-13 08:26:42 IST
இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் காக நாட்டை துண்டாடும் சதி .... இந்த ஜாதி வாரி கன்ன்கேடுபின் நோக்கம் ... எந்த ஜாதி எங்கு இருக்குனு தெரிந்து இவர்கள் ஜாதிவெறிய தூண்டி அதுல குளிர் காயுவனுங்க ........ அதிகம் ஜாதியினர் இருக்கும் இடத்தி அந்த ஜதிகாறன நிறுத்தி வெற்றி பெற சதி இது ............... அன்ன ராமதோஸ் இதனால நல்ல பயன்பெருவாறு... 
ரங்கராஜ் - லாஸ்ஏஞ்சில்ஸ்அமேரிக்கா,இந்தியா
2010-08-13 05:40:14 IST
இருக்கிற பிரச்னைகள் போதாது என்று சாதிவாரி கணக்கு எடுப்பு வேண்டுமா ?பல கட்சியின் தலைவர்கள் காணாமல் போய்விடுவார்கள் .தமிழ்நாட்டை இந்த சாதி தான் ஆள வேண்டும் என போராட்டங்களும் சாதிக்கும் சாதிக்கும் சண்டை தொடர் கதையாகும் .யார் பலசாலி என்பதில் போட்டி நிலவும் .அமைதி குலையும் .இது தேவையா ?...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-13 03:39:13 IST
ஹயோகோ. ஒழிச்சானுகடா. நாட்ட முன்னேத்த ஒரு நாலு தொழில தொடங்கு, நல்ல கல்விய கொடு, விவசாயத்த பெருக்குங்கடா பரதேசிங்கலானா, இவனுக வீதி வீதியா சாதிய கணக்கு எடுக்கிரான்கலாம். இது எப்படி இருக்குன்னா திங்குறதுக்கு வேற எதுவுமே இல்ல, பேசாம மலத்தையே திம்போம்ன்கிற மாறி இருக்கு. நாசம் பண்ணிட்டீங்களேடா. நாட்ட மொத்தமா ஒழிச்சுட்டேங்கலேடா. வருங்கால வம்சாவழியோட வேர்ல வெந்தண்ணிய ஊத்திட்டீங்கலேடா பாவிங்களா. நீங்க நல்லா இருப்பீங்களா.. நான் போறேன்... போயி இன்னிக்கே குடும்பகட்டுபாடு ஆப்பரேசன் பண்ணிட்டு மூணு கிலோ அரிசியும் முப்பது ரூவா பணமும் வாங்கிட்டு வரபோறேன். உங்களமாறி கேடு கெட்ட நாயிங்க இருக்கிற சமுதாயத்தில என்னோட புள்ள, பேரபுள்ளைங்க எல்லாம் நல்லா பொளைக்கும்ன்கிற நம்பிக்கையே எனக்கு போச்சு. பாவம், நீங்க பண்ணுற தப்புக்கு, அதுங்க இங்க பொறந்து நரக வாழ்க்கைய அனுபவிக்கிறத விட பொரக்காமையே இருக்கிறது பெட்டர். நான் வரேன். கு.க. ஆசுபத்திரி எங்க இருக்கு? வேற யாராச்சும் வரீங்கலாப்பா என்கூட. வாங்க சீக்கிரம் போவோம். அப்புறம் அங்கயும் கூட்டம் ஜாஸ்தி ஆய்ட போவுது. டே குமாரு, செல்வம், பன்னீரு, வாங்கடா போவோம். வீட்ல சொல்லிட்டு வாங்கடா, நல்லா கோழிகால் சூப்பு வெக்க சொல்லி. வரப்போ ரொம்ப வலிக்குமாம், நடக்க கூட முடியாதாம். வாங்க வாங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக