ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

திட்டம் என்ன என்றும் சுரேஷ் கேள்வி எழுப்புகின்றார்,எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் அரங்கத்தில் இணைவது

தமிழ் மக்கள் சார்பில் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடிப் பொதுவான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்பட வேண்டிய தேவையை நிராகரிக்க முடி யாது.     இவ்வாறான நடை முறையில் பங்கேற்க வேண் டிய தார்மீகக் கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.      ஏனென்றால் அண்மைக் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப் புகளுக்கும் அழிவுகளுக்கும் மாத்திரமன்றி நல்ல அரசியல் தீர்வொன்று கிடைப்பதற்குத் தடையாகச் செயற்பட்டதற்கும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம  அளவில் பொறுப்பாளியாகும்.
எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் அரங்கத்தில் இணைவது பற்றிப் பரிசீலிக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறுவது விதண்டா வாதம். கட்சிகள் கூடிப் பேசிப் பொதுவான வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டுமேயொழிய ஏதாவது ஒரு கட்சியின் கொள்கையை மற்றைய எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த முடியாது. அப்படி வலியுறுத்துவது மேலாதிக்க மனோபாவம்.
அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை என்ன செய்திருக்கின்றன என்றும் இப்பிரச்சினைகளின் தீர்வுக்கு அக் கட்சிகளின் திட்டம் என்ன என்றும் சுரேஷ் கேள்வி எழுப்புகின்றார்.     இனிமேல் செய்யப்போவது என்ன என்பதைத் தீர்மானிப்பதற்காகவே பல கட்சிகள் சேர்ந்து அரங்கம் உருவாகியது.
அந்த நடைமுறையில் பங்குபற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.       இதே கேள்விகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் கேட்க முடியும். இதுவரை அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. பாதிப்பை மாத்திரம் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
பிழையான கொள்கை
இனப் பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்வின்றியிருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனி நாட்டுத் தீர்மானத்துக்குப் பின்னரே பாரதூரமான பாதிப்புகள் தமிழ் மக்களுக்கு ஏற்படத் தொடங்கின. ஆயுதப் போராட்டம் வலுவடைந்து புலிகளின் கை மேலோங்கியதற்கும் அதன் விளைவாகத் தமிழ் மக்களுக்குப் பாரிய இன்னல்கள் ஏற்பட்டதற்கும் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய தனிநாட்டுத் தீர்மானமே அடிப்படைக் காரணம்.
அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்ற அக்கறையுடன் உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணி. முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டம் எதுவும் இல்லாமலேயே கூட்டணி உருவாகியது. குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவது போல, கூட்டணி உருவாகிய பின்னரே கொள்கை பற்றிச் சிந்தித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக