செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ராமதாஸ, ஐயா... சாமீ... கூட்டணியில் இடம் கொடுங்கையா..?

:"தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இனி ரேங்க் போடமாட்டோம்; ஒரு முறை ரேங்க் போட்டதால் தான் வெளியே நிற்கிறோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தேனியில் அவர் கூறியதாவது:மக்களின் பசியையும் பட்டினியையும் போக்க வேண்டும் என, தமிழக முதல்வர் கூறியுள்ளார். அவர் சொல்வதை கேட்க நன்றாகத் தான் உள்ளது. இவற்றை போக்க வேண்டுமானால், பூரண மதுவிலக்கு வேண்டும்.ஆகஸ்ட் 15ல் கொடியேற்றும்போது, அவர் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை அறிவிக்க வேண்டும். ஏழைகள் நலனுக்காக எத்தனை நலத்திட்டங்களை நிறைவேற்றினாலும் மதுவால் அவை அனைத்தும் அடிபட்டுபோகும்.

கூட்டணி பற்றி பல குழப்பங்கள் உள்ளன. யார் எங்கு உள்ளனர் என்பதே தெரியாத நிலை உள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இனி ரேங்க் போட மாட்டோம்; ஒரு முறை ரேங்க் போட்டதால் தான் வெளியே நிற்கிறோம். இனியும் அதை செய்ய மாட்டோம். தேர்தல் வர உள்ள நிலையில் மக்கள் ரேங்க் போடுவார்கள். நாங்கள் தனியாக நின்றாலும் 20 இடங்களில் வெற்றி பெறுவோம்.மின்னணு ஓட்டுப்பதிவு மூலம் தேர்தல் நடத்தினால், அதில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக ரசீது வர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.மாநில தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.
ராம்குமார் - Bodinayakanur,இந்தியா
2010-08-10 08:08:29 IST
காவிரியை வைகை கூட இணைக்க விடமாட்டோம் நு உன் பையன் சொலிட்டு திரியுறான். காவிரியை வட தமிழ் மக்கள் மட்டுமே பயனடைய வேணும்னு சொல்லுறன். தென் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணி கொடுத்தாலும் புரட்சி வெடிக்கும்னு சொல்லுறான். நீ என்னடான தேனீ-ல வந்து ரேங்க் போடுறத பத்தி பேசிட்டு இருக்க....
AXN பிரபு - Chennai,இந்தியா
2010-08-10 07:48:06 IST
மருத்துவர் ராமதாஸ் அவர்களே நீங்கள் வெளியே இருப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று தமிழக மக்கள் அறிவார்கள். நீங்களும் உங்கள் கட்சியினரும் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை பொழுது போனால் பொழுது விடிந்தால் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்துக்கொண்டே இருந்தீர்கள். தகுதிக்கு மீறி உங்களுக்கு ஆட்சியில் பங்கு வந்தும் அதன் அருமை பெருமை தெரியாமல் தவளை வாய்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து விமர்சிப்பதும் திமுக கொண்டு வந்த கடற்கரை மேம்பாலம் புதிய நவீன நகரம் போன்ற அற்புத திட்டங்களை தடுப்பதும் ஆகிய பல கீழ்மைகளை அரங்கேற்றினீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் கட்சி காட்டுமிராண்டி பேச்சாளர் காடுவெட்டி குரு கருணாநிதியையும் மத்திய மந்திரி ராஜாவையும் மிகவும் கேவலமாக பேசியது தான் திமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி நீங்கள் வெளியேற காரணம். நீங்கள் மார்க் போட்டதால் அல்ல. வீணாக பொய் சொல்ல வேண்டாம். உங்களுக்கு மக்கள் மார்க் போட்டு கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் இன்னமும் காவிரி வைகை இணைப்புக்கு எதிர்ப்பு வன்னியருக்கு மட்டும் தனி ஒதுக்கீடு என்று கீழ்மை நிலையிலிருந்து நீங்களும் உங்கள் கட்சி அடியாட்களும் இன்னமும் வெளிவரவில்லை என்பதையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் களத்தில் அப்புறப்படுத்த வேண்டிய குப்பையாகத்தான் நீங்களும் உங்கள் கட்சியும் உங்களை மக்களிடம் காட்டிகொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்களா ?...
செந்தில் - Thindivanam,இந்தியா
2010-08-10 07:20:38 IST
தணியா நின்னு பாரு எலேச்டின் கமிஷன் உண் டப்பாவ கிழிக்க போவுது. 20 தொகுதிஇல தேபோசிட் வாங்கு பார்க்கலாம். கட்சிய கலைச்சிட்டு அவன் அவன் குடும்பத்தை பார்கசொல்லு....
ராஜா - பெங்களூர்,இந்தியா
2010-08-10 07:12:58 IST
உலகத்தில் இருக்கிற அத்தனை கேவலமான வார்த்தையை பயன்படுத்தி உன்னை திட்டியாச்சு . உனக்கு சொரணை சுத்தமா இல்லன்னும் தெரிஞ்சி போச்சு....
das - ambur,இந்தியா
2010-08-10 06:55:06 IST
ரேங்க் போடா விட்டால் என்ன grade சிஸ்டம் இருக்குல்ல....
INDRAJIT - Benares,இந்தியா
2010-08-10 06:49:30 IST
கூட்டணியில் யார் எங்கிருக்கிறார்கள் என்று மற்றக் கட்சிகளுக்கோ அல்லது மக்களுக்கோ எந்தக் குழப்பமும் இல்லை ! குழப்பமும், பேதலிப்பும் உங்களுக்கு மட்டும்தான் ! கண்கள் முழுதுமாகக் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள் ! இனியும் நீங்கள் RANK போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன ! இப்போதுதான் மக்கள் போட்ட, போடும், போடப்போகும் RANK பற்றிய பயம் வந்திருக்கிறது ! உங்கள் மீதும், PMK மீதும் மக்களுக்கு நம்பிக்கை வர, நீங்கள் மக்களுக்காகப் பல த்யாகங்களைச் செய்ய வேண்டும் ! என் வாழ்க்கையில் மனிதாபிமானத்துடன் எத்தனையோ பேருக்கு ஜாதி, மதம் பாராது வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் ! உதவி பெற்றோர் மனம் கனிந்து கண்களில் நீர் மல்க, நம்மையும் நம் குடும்பத்தையும் வாழ்த்தும்போது ஏற்படும் மன நிறைவும், சந்தோஷமும், ஸ்வர்கானுபவமும், அதை, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும், புரியும் ! ( இதைக் கூடச் சற்றுக் கூச்சத்துடன்தான் சொல்கிறேன், வேறு வழியின்றி ! ) இன்று அதற்கும் கூச்சமின்றி லஞ்சம் வாங்குகிறார்கள் அரக்கர்கள் ! நீங்களோ, அசையும், அசையா ஜீவன்களுக்கெல்லாம் பெரும் கேடு விளைவித்து விட்டு ஒரு சாம்ராஜ்யத்தையே எதிர்பார்க்கிறீர்கள் ! த்யாகத்தின் அருமை புரிந்ததால்தான், நம் பட்டன், முப்பாட்டன்கள் எல்லாம் அன்று சொத்து, சுகம், குடும்பம், உடல் பொருள், ஆவி அனைத்தையும் துச்சமாக மதித்து மனமாரத் த்யாகம் செய்து நமக்குச் சுதந்த்திரம் வாங்கிக் க்டுத்தார்கள் !...
KIM - korea,இந்தியா
2010-08-10 06:46:00 IST
எப்படியோ திருந்துனா சரி !!மக்கள் மன்னிப்பார்கள்...
கார்த்திகேயன் - tirupur,இந்தியா
2010-08-10 06:43:09 IST
உனக்கு தன எல்லா கட்சிகளும் சேர்ந்து தானே ரேங்க் போட்டு நீ செள்ளகசுன்னு முடிவு பண்ணி வச்சிருக்காங்க இன்னும் உனக்கு அறிவு வர மாட்டேங்குது பாரு உனக்கு அறிவு இருக்க இல்லையா ன்னு தெரியல இப்படியே பண்ணின உன்னுடைய கட்சி காணமல் போய்டும் உன்னுடைய ஜம்பம் இல்லம் இனிமேல் இந்த தமிழ்நாடுல எடுபடாது தைல புறம் தோட்டத்த வச்சி இனிமேல் வண்டி ஓடாது குடும்பத்தோட அந்த தோட்டத்துல பொய் உன் குடும்ப உன்னுடைய பய்யன் குடும்பம் எல்லாம் பொய் செட்டில் ஆயிடுங்க சத்தம் போடா பொய் பதுங்குற வேலைய பாருங்க...
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
2010-08-10 06:41:22 IST
திமுகவுடன் சேர்ந்தால் மார்க் போடுவது பிரச்னை ஆகும் .காங்கிரச்சுடன் என்றால் மத்திய அரசை குறை சொல்ல கூடாது. அதிமுகவுடன் சேர்ந்தால் யாரைக்குறை சொல்வது ? சீக்கிரம் கூட்டணி குறித்த முடிவுக்கு திமுக வந்தால் ராமதாஸ் தூங்க முடியும் .இல்லையெனில் இப்படி நாகேஷ் போல திருவிளையாடல் ஸ்டைலில் புலம்பல் தொடரும் .முடியுங்கப்பா !...
john - tirunelveli,இந்தியா
2010-08-10 06:30:23 IST
"அந்த பயம் இருக்கட்டும் "...
நா ஹரிப்ரசாத் - chennai,இந்தியா
2010-08-10 06:29:43 IST
அவங்க ரேங்க் வாங்கலைன்றது வேற விஷயம் . ஆனா ரேங்க் போட நமக்கென்ன தகுதி இருக்குன்னு யோசிக்க வேணாமா? நமக்கு தெரிஞ்சதெல்லாம் கட்சிக்கு கட்சி தாவற mon(k)ey business தான . அதுசரி தரவரிசை ன்னு சொல்லாம ரேங்க் ன்னு சொல்லி இருக்கிங்களே உங்களுக்கு யார் அபராதம் போடுறது? எல்லாத்துக்கும் சேத்து மக்கள் போடுவாங்கடி.2011 க்கு அப்புறம் பாரு உன் கட்சியே காணாம போப்போவுது...
M - US,இந்தியா
2010-08-10 06:27:08 IST
இந்த ஆளுக்கு இப்ப தான் புத்தி வந்திருக்கு போலிருக்கு...
H நாராயணன் - Hyderabad,இந்தியா
2010-08-10 06:20:48 IST
ஐயா... சாமீ... கூட்டணியில் இடம் கொடுங்கையா.......
க நாராயணன் - chennai,இந்தியா
2010-08-10 05:59:47 IST
பையனுக்கு பதவி இல்லை என்ற நிலையில் இதெல்லாம் சகஜமப்பா !...
Anniyan - thailand,இந்தியா
2010-08-10 05:50:24 IST
ராமதாஸ் பற்றி வாசகர்கள் ரேங்க் போட ஆரம்பிக்கலாம் இன்றும் நல்ல விருந்து இருக்கு, தற்பொழுது ராமதாசின் ரேங்க் 0...
தமிழ் சிங்கம் - usa,யூ.எஸ்.ஏ
2010-08-10 05:39:26 IST
:"தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இனி ரேங்க் போடமாட்டோம்; ஒரு முறை ரேங்க் போட்டதால் தான் வெளியே நிற்கிறோம்' - பம்முராயின்களே, குருவுக்கு அடுத்து லூசு புள்ள லூசு (அன்பு) மணிக்கு கட்டம் கட்டிருப்பாரோ தலைவரு! மேட்டருக்கு வருவோம், தேனீ மதுரையில இருக்கு, வைகை மதுரையில இருக்கு, இவனுங்க வடநாடு, காவேரியை வைகை கூட இணைக்க மாட்டாயிங்க, இங்க என்ன மணி ஆட்டிட்டு இருக்காரு!...
Radhakrishnan - Melbourne,ஆஸ்திரேலியா
2010-08-10 05:37:33 IST
சட்டி சுட்டதடா கை விட்டதடா !!!...
kumar - melbourne,ஆஸ்திரேலியா
2010-08-10 05:33:39 IST
நீ எல்லாம் ஒரு ஆளுன்னு ....................
2010-08-10 05:26:23 IST
ஐயா, ஆண்டவன் அருளால் நான் குடிப்பதில்லை. குடித்து -வெறித்து - கூத்தாடிச் சீரழியும் மக்களினம் கண்டு வருந்தும் கூட்டத்தாரில் நானும் ஒருவன். ஆகஸ்ட் 30 -இல் திறக்கப்பட்ட கடை ஆகஸ்ட் 15 -இல் அடைக்கப்பட்டால் நானும் மகிழ்வேன். மருத்துவர் ஐயா அவர்களுக்கு ஓர் அன்பின் வேண்டுகோள். முதலில் உங்கள் கட்சியில் குடிப்பவர்கள் எவரும் இருக்கக் கூடாது என்றும், குடிப்பவர்களுக்கு எந்த பதவியும் இல்லை என்றும் கூறி, உங்கள் கட்சியைத் தூய்மைப் படுத்தலாமே. இதைப்பார்த்து முதல்வர் கட்சி, முன்னாள் முதல்வர் கட்சி, முதல்வராக விரும்புவோர் கட்சி என்று எல்லோரும் திருந்தலாமே! தமிழ் நாடும் வாழுமே! வழி காட்டுவீர்களா? தமிழகம் உங்களை வாழ்த்தும்....
செந்தில் குமார் - Chennai,இந்தியா
2010-08-10 05:24:35 IST
ராமதாஸ் அண்ணாச்சி ... தனியா நின்னு பாருங்க அண்ணே..இருபது தொகுதி மட்டும் இல்ல... தமிழ் நாட்டுள்ள ஒரு தொகுதி கூட கிடைக்காது மாமா...!!! பேசாம போய் யாருகிட்டயாவது ஒட்டி பிழைக்க வழிய பாரு மச்சி... இல்லாங்காட்டி டெபாசிட்டு கூட இல்லாம கட்சிய கலைத்து விடுவாங்க... அப்புறம் சாப்பாட்டுக்கு வழி இல்லாம 108 க்கு தான் கால் பண்ணனும்... அப்புறம் உங்க பாடு...சம்போ சிவ சம்போ..!!...
jopet - singapore,சிங்கப்பூர்
2010-08-10 05:21:56 IST
துணை நகரம் அமைக்க முட்டுக்கட்டை விமானநிலையம் விஸ்தரிக்க முட்டுக்கட்டை தமிழ் நாட்டிலுள்ள நதிநீர் இணைப்புக்கு தடை இப்படி தமிழகத்தின் ஆக்கபூர்வமான பணிகள் அத்தனைக்கும் சொட்டை கண்டு பிடித்து முட்டுக்கட்டை போட்டுவிட்டு அதை வைத்து மிரட்டி பதவி பெற நினைத்துவிட்டு குறை சொன்னதால் வெளியில் நினைக்கிறோம் என்று மிண்டும் பேசாமல் அமைதியாக இருந்தால் போதும், பாமகவிற்கு நினைத்ததற்கு மேல் கலைஞர் தருவார். இது மருத்துவருக்கும் தெரியும். But advise your son to tone down sir !...
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
2010-08-10 05:14:05 IST
பா.ம.க. இணைந்திருந்த ஒவ்வொரு கூட்டணியிலும் தலைமைக் கட்சிக்கு அடுத்த மிகுதியான ஒதுக்கீடு தன் கட்சிக்கே வேண்டும் என்ற ஆவலில் மேற்கொண்ட முயற்சிகளே பிற கட்சியினரிடம் வெறுப்பையும் ஒத்துழையாமையையும் தந்தன. இப்பொழுது தலைமை என்றதும் எல்லாம் தனக்கே என்னும் உணர்வு வரக்கூடாது. தேர்தல் வெற்றிக்காகக் காங்.உடன் அல்லது தி. மு.க. அல்லது அ.தி.மு.க உடன் கூட்டுச் சேருவதில்லை என்னும் திட்டவட்ட முடிவை எடுத்து அனைத்துத் தமிழினப் பற்றாளரையும் இணைத்துச் சென்றால் வெற்றி வாகை சூடலாம். வேறொரு கூட்டணியில் ஐக்கியமாவதற்கான நாடகம் என்றால் இக்கனவு கருவிலேயே கருகலாம். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்...
ராம் - சிங்கப்பூர்,இந்தியா
2010-08-10 05:03:06 IST
யோவ் லபக்குதாசு நீ ரேங்க் போடுறது இருக்கட்டும் முதல்ல இந்த மாதிரி கேனத்தனமா ஒளருரத நிப்பாட்டு,ஏற்கெனவே ரேங்க் போட்டுதான் அரசியல் அனாதையா நடுத்தெருவுல நிக்கிறோமே அப்புறமென்ன.அது என்ன ஒட்டு போடுறதுக்கு ரசீது வேணும்னு புதுசா ஒரு புரளிய கெலப்பிவிடுற.நீயும் உன் பயலும் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே திரியிரிங்களே ஏன்டா இப்பிடி படுத்துரிங்கேலடா ..............
வெங்கடேசன் - richmond,யூ.எஸ்.ஏ
2010-08-10 04:58:27 IST
கம்மி ரேங்க் போட்டு உதை வாங்கின வாதியார் நீங்க தான்னு நினைக்கறேன். அழாத கொறையா நீங்களும் பிச்சை எடுத்து பாக்கறீங்க தட்டுல அன்புமணிக்கு எம்.பி சீடுன்ற காசு வந்து விழ மாட்டேங்குதே. அதான் தனிச்சு நின்னு ஆணி புடுங்கினா 20 ஆணி புடுங்குவேன்னு சொல்லரீங்களே அதா புடுங்கி ஒரு பெரிய அரசியல் சக்(க)தியா வர வேண்டியது தானே?...
ரவி - chennai,இந்தியா
2010-08-10 04:20:35 IST
இந்த ஆளை கூட்டணியில் சேர்க்காமல் இருந்ததற்கு கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரே மேடையில் பாராட்டு விழா எடுக்க வேண்டும்!!!...
sadeesh - tutucorin,இந்தியா
2010-08-10 04:16:15 IST
அய்யா குடிதாங்கி தனிய நின்னு...
தமிழ்மகன் - chennai,இந்தியா
2010-08-10 04:10:19 IST
கொஞ்சம் கூட மானமே இல்லையா உனக்கு??? எதற்கு இப்படி கூட்டனிக்கு கெஞ்சுகிறாய்??? தி.மு.க. உன்னை எப்படி பிச்சை எடுக்க வைத்துவிட்டது பார்த்தாயா? அ.தி.மு.கவும் உன்னை கண்டுகொள்ளவில்லை.... இனியாவது ஒரு தலைமைக்கு விசுவாசமாய் இரு அரசியல் அநாதையே,,,,,,...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-10 03:35:34 IST
கண்டிப்பாக தி.மு.க, அ.தி.மு.க ரெண்டுமே இந்த ஆளை சேர்த்து கொள்ளகூடாது. தொண்டர்கள் மிக கடுமையாக எதிர்க்க வேண்டும். இவனும் இவனோட பயலும் ரொம்ப கொடச்சல் புடிச்ச ஆளுங்க. இவன சேத்துகிறதும் ஒன்னு, வெளில போற ஓனான வேட்டிக்குள்ள விட்டுகிறதும் ஒன்னு. இவனை விட நீங்களே வன்னியர்களுக்கு நல்லது செய்து அவர்களின் நன்மதிப்பை பெற முயர்ச்சி செய்யுங்கள்....
G Sankaran - Cupertino,யூ.எஸ்.ஏ
2010-08-10 03:33:13 IST
மக்கள் ஏற்கனவே "ரேங்க்" போட்டுவிட்டார்கள் நீங்கள் சந்தர்பவாதி என்று. எனவே நீங்கள் யாருக்கும் ரேங்க் போடவேண்டிய அவசியமில்லை....
உள்ளூர்வாசி - india,இந்தியா
2010-08-10 03:32:41 IST
மின்னணு ஓட்டுப்பதிவு மூலம் தேர்தல் நடத்தினால், அதில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக ரசீது வர வேண்டும்.அதில் குறிப்பாக மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்று பதிவாகியிருக்க வேண்டும்.எந்த சின்னத்துக்கு ஓட்டு போட்டாலும்,மாம்பழ சின்னத்திலேயே பதிவாக வேண்டும்..இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா..தேர்தல் பயத்துல என்ன பேசுறதுன்னே தெரியலையா..டார்சர் பண்ணியே கொல்றாங்கப்பா...நாமதாசும்,வம்பு மணியும்.....
பு.செல்லதுரை. - nellai,அல்ஜீரியா
2010-08-10 02:13:49 IST
ஹலோ.ராமதாஸ்.அவர்களே.உங்கள்.மகனைகொஞ்சம்.அடக்கி.vaasika.சொல்லுங்கள்...
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-10 02:10:51 IST
அய்யா உங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் ஜீரோ மார்க் போடா போகின்றனர், அதற்கு காரணம் வன்னியர்களை தூண்டி விட்டு எதிலும் அராஜகம்,எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேறவிடாமல் பேரம் பேசுவது,தன் மகனுக்கு அமைச்சர் பதவி,இந்த திட்டம் நிறைவேறவேண்டும் என்றால் கோடி கணக்கில் பணம் கேட்பது,இல்லை என்றால் காடு வெட்டி,மாடு வெட்டி வைத்து அராஜகம் செய்வது. சென்னை ஏர்போர்ட் விமான விரிவாகதிர்கு தடை யாரு நீங்கள்தான்.தமிழ்நாட்டில் பல ஜாதி மக்கள் இருகிண்டார்கள்,வன்னியர்கள் மட்டும் அல்ல தமிழ்நாடு.தமிழ்நாட்டில் ஜாதி கட்சியை அறவே ஒழிக்க வேண்டும்.இதுவே என் விருப்பம்....
மரியா - Dubai,இந்தியா
2010-08-10 01:52:34 IST
இவருடய ஐடியா எல்லாமே செல்லாகாசு. எல்லாமே சட்டசபை சீட்டுக்கு உள்ள ஐடியா தான். திராவிட கட்சிகளே தயவு செய்து இவரை சேர்க்க வேண்டாம், இவர் ஒரு பச்சோந்தி என்று எல்லோருக்கும் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக