ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இலங்கை கடற்படையினர் மீட்டனர்,தமிழக மீனவர்களின் இரண்டு படகையும

ரம் : இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதால் கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களின் இரண்டு படகையும், இலங்கை கடற்படையினர் மீட்டனர்.  ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 18 ல் மீன்பிடிக்க சென்ற மீனவர் செல்லத்துரையின் படகு மீது, இலங்கை மீனவர்கள் குண்டு வீசியதால், யரணைதீவு கடல் பகுதியில் கடலில் மூழ்கியது. இரண்டு நாளுக்கு பின் மூழ்கிய படகை மீட்க சென்ற மீனவர் பால்துரை படகின் மீதும், இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதால் இவரது படகும் கடலில் மூழ்கியது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கரை பகுதியில் மீன்பிடிக்கச்செல்வதை தவிர்த்தனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஏராளமான படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.  மீனவர்கள் கூறியதாவது: முன்பு இலங்கை கடற்படையினர் ராமேஸ்வம் மீனவர்களை தாக்கிய சம்பவம் நடந்தது. தற்பேது அவர்கள் பிரச்னை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் படகின் மீது வெடிகுண்டு வீசும் சம்பவம் தொடர்வதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளதாக, தெரிவித்தனர்.இந்நிலையில், யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கிய இரண்டு படகையும், இலங்கை கடற்படையினர் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வந்து கரையில் நிறுத்திள்ளனர். இரண்டு படகையும் ராமேஸ்வரம் கொண்டு வர,இலங்கை செல்வதற்காக படகின் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக