வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கோத்தபாயவை கொலை செய்ய முயற்சித்த புலிகள் இயக்க மூவர் கைது

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, மலேசியாவிலிருந்து செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்கள் இருவரையும்  சிங்கள பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார். ஜயந்த வீரகோன் அல்லது ரட்ணவீர வீரகெட்டிய என்பவரை புலிகளுடன் தொடர்புயை குற்றத்திற்காக கைதுசெய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தனர்.  அவரை கைது செய்தபின், அவர் மலேஷியாவிலிருந்து செயற்படும் புலிகள் இயக்க அங்கத்தவர்களான செல்வமோகன் மற்றும் பிரபாகரனுடன்  இணைந்து பாதுகாப்புச் செயலாளரையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் கொலை செய்ய சதி செய்தமை தெரியவந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தெற்கில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னிலங்கை சிங்கள பாதாள உலகக் குழு அங்கத்தவரை நியமித்திருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். இவ்வழக்கு விசாரணையை செப்டெம்பர் 8 ஆம் திகதிவரை நீதவான் ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக