அச்சத்துக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்துக் கொண்டிருந்த தாம் கனடாவுக்கு கப்பல் மூலம் வருவது இலேசான காரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கடந்த ஒக்டோபர் மாதம் ஓசியன் லேடி கப்பல் மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு சென்ற அதிகளில் ஒருவர் இதனை குறி;ப்பிட்டுள்ளார். வன்னியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமது அனைத்து உறவுகளையும் இழந்ததாக அவர் கனேடிய இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இலங்கையில் இருந்து தப்பி வருவதற்காக சுமார் 44 ஆயிரம் டொலர்களை கப்பல் பயணத்துக்காக வழங்கியதாக பெயர் குறிப்பிடாத அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவுக்கு கப்பலில் பயணிக்கும் போது உணவுகள் கிடைக்கவில்லை. சில வேளைகளில் பாரிய அலைகளினால் தாம் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கப்பலில் பயணித்த ஒவ்வொரு நாளும் தமது வாழ்நாளின் இறுதிநாளாக இருக்கும் என்ற பயத்துடனேயே இருந்ததாக தெரிவித்துள்ள அவர் பயணம் கொடுரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தம்முடன் வந்தவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களா? என்பது தமக்கு தெரியாது எனினும் அவர்களும் சாதாரண மக்கள் என்றே தாம் கருதியதாகவும் குறித்த இலங்கை அகதி குறிப்பிட்டுள்ளார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக