செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஜேர்மன் புலிகளுக்கு ஆயுத கொள்வனவு பயங்கரவாத எதிராக குற்றச்சாட்டு

விடுதலை புலிகளுக்கு ஆயுத கொள்வனவு மற்றும் அவர்களது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பணம் வசூலித்தவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என ஜேர்மன் வழங்கு தொடுநர்கள் தெரிவித்தனர். ஜேர்மன் பிரஜைகளான சசிதரன் (33), கோணேஸ்வரன் மற்றும் இலங்கையரான விஜிகனேந்திரா(35) வயது ஆகியோர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றை சேர்ந்தவர்கள் எனவும் சட்டத்தை மீறியதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும் கடந்த மார்ச் மாதம் ஜரோப்பிய ய+னியனின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளுக்கு உதவியதன் பிரகாரம் ஜேர்மனின் மேற்க பிராந்திய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
2007 ஜூலை தொடக்கம் 2009 ஏப்பரல் வரை 3 மில்லியன் ய+ரோ பணத்தை ஜேர்மன் தமிழர்களிடமிருந்து விடுதலை புலிகள் ஆயுதம் மற்றும் ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்ய பரிமாற்றியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
வி.எஸ்.விஜேகனந்திரா புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர்கள் எப்போது விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக