ஈழத் தமிழர்களுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்த எம்.வி.சன்.சி கப்பல் கனேடிய கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் இத்தகவலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி உள்ளார். இக்கப்பலில் 490 பேர் வரை புறப்பட்டு வந்திருக்கின்றார்கள். ஆயினும் இக்கப்பல் எப்போது முற்றுகையிடப்பட்டது என்பது குறித்து மிகவும் சரியாகவும் துல்லியமாகவும் சொல்ல முடியாது உள்ளது.
கப்பலில் வந்தவர்கள் அனைவரும் அகதிகள் என்று கனேடிய அதிகாரிகளுக்கு கப்பலின் மாலுமி சொல்லி இருக்கின்றார். ஆயினும் அவர்களில் புலிகள் இயக்கத்தினர் இருக்கக் கூடும் என்று கனேடிய அரசு சந்தேகிக்கின்றது. குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் பாரிய கடற்பரப்புக்குள் வைத்து முற்றுகை இடுகின்றமையை விட அவர்களை கனேடிய கடல் பரப்பில் வைத்து மடக்குகின்றமையே மிகவும் சிறந்த உபாயம் என்றார் கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.
சர்வதேச கடல் பரப்பில் வைத்து இவர்களை மடக்கிப் பிடிக்கின்றபோது சர்வதேச சட்டங்கள், சர்வதேச கடப்பாடுகள் போன்றவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்.அப்படிச் செய்திருந்தால் ஏராளமான சட்டப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும்.எனவேதான் கனேடிய கடலில் இடைமறித்துப் பிடித்தோம் என்றும் அவர் கூறி உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக