புதன், 18 ஆகஸ்ட், 2010

ப்ளாக்பெர்ரி... அனைத்து தகவல்களையும் இடைமறிக்க மத்திய அரசு உத்தரவு!

BlackBerryபாதுகாப்பு காரணங்களுக்காக, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் ப்ளாக்பெர்ரி மொபைல் போன்களின் அனைத்துவித தகவல்களையும் இடைமறித்து சோதிக்க மத்திய அரசு அனைத்து மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'வரும் 31-ம் தேதி முதல் ப்ளாக்பெர்ரி சேவைகளை முற்றாக இடைமறித்து சோதிக்க வேண்டும். இதற்கான உள்நுழை அனுமதியை ப்ளாக்பெர்ரி தயாரிப்பாளர் ரிம் தராவிட்டால் ப்ளாக்பெர்ரி சேவையை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். இந்த உத்தரவை ஏற்க மறுக்கும் மொபைல் ஆபரேட்டர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும்' என்று மத்திய அரசின் உத்தரவில் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ப்ளாக்பெர்ரி தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் மொபைல் ஆபரேட்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

வழக்கம் போல இந்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்துவிடும் என்றே பெரும்பாலான நிறுவனங்கள் கருதி வந்தன.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது என்று கூறிவிட்ட அரசு, ப்ளாக்பெர்ரி விஷயத்தில் மிக உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

ஒருவேளை தகவல்களை இடைமறிப்பதற்கான முழு உள்நுழை அனுமதியை (Full Access) ப்ளாக்பெர்ரி தர மறுக்கும் பட்சத்தில் (இப்போது சில தகவல் சேவைகளை மட்டும் இடைமறிக்க அனுமதி அளித்துள்ளது ரிம். ஆனால் இதுகுறித்து இந்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.), செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4.5 லட்சம் ப்ளாக்பெர்ரி பயன்பாட்டாளர்களுக்கு முற்றாக சேவைகள் நிறுத்தப்பட்டுவிடும்.

உள்நுழை அனுமதியை ப்ளாக்பெர்ரி வழங்கும் பட்சத்தில், அந்த நிறுவனம் வழங்கும் யாஹூ, ஜிமெயில், எம்எஸ்என் சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் என்கிரிப்ட்டில் செயல்படும் PIN மெஸஞ்சர் சர்வீஸ் முற்றாக நிறுத்தப்படும்.

இப்போதைய நிலவரப்படி, மற்ற சேவைகளை இடைமறிக்க ப்ளாக்பெர்ரிய ஒப்புக் கொண்டாலும், பிஇஎஸ் (Blackberry Enterprise Service) எனப்படும், நிறுவனங்களுக்கான அதிகபட்ச மின்னஞ்சல் வசதியை மத்திய அரசு இடைமறிப்பதை மட்டும் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் இதற்கான உள்நுழைவு வசதியை அளிக்க முடியாது என்று கூறி வருகிறது. இதுகுறித்து விவாதிக்க மத்திய தொலைத் தொடர்பு துறையுடன் பேச முயற்சிக்கிறது. ஆனால் மத்திய அரசோ, இந்த விஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எனும்போது அதில் எந்த சமரசத்துக்கும் கிஞ்சித்தும் இடமில்லை என்று ரிம் நிறுவனத்துக்கு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மெஸஞ்சர் மற்றும் என்டர்பிரைஸ் சர்வீஸ் ஆகிய இரண்டுக்குமே உள்நுழை அனுமதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தந்தாக வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத் துறையின் Unified Access Service Licence (UASL) நிபந்தனைகளின்படி, எந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமும், அரசின் கட்டளைக்கு மாறாக செயல்பட முடியாது. அந்தந்த நேரம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மொபைல் ஆபரேட்டர்களும் மறுபேச்சின்றி கடைப் பிடித்தாக வேண்டும். இல்லையேல் அவர்களின் உரிமங்கள் எந்த முன் எச்சரிக்கையும் இன்றி ரத்து செய்யப்படும்.

பதிவு செய்தவர்: இறை அடிமை
பதிவு செய்தது: 17 Aug 2010 9:06 pm
பிளாக் பெரி நிறுவனத்துடன் பேசியதில் லஞ்சம் கொடுக்க மறுத்து விட்டார்கள் அதனால் தான் இந்த உத்தரவு .எச்சரிக்கை கடிதத்தை எனக்குள் ------- துடைத்து போட்டு விட்டார்கள் -டஸ்ட் பின்

பதிவு செய்தவர்: கிறுக்கன்
பதிவு செய்தது: 17 Aug 2010 2:33 pm
ஏன்ய்யா எழுதின விசயத்தையே திரும்ப திரும்ப ஒவ்வொரு பத்தியிலையும் எழுதிருக்கிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக