செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சுவிற்சர்லாந்து புலம்பெயர் சம்மேளனமிடையே பிளவு. நந்தனவிற்கு எதிராக சட்டநடவடிக்கை.

பேர்ண் Waisenhausplatz எனுமிடத்தில் இலங்கையர் விழா 2010 எனும் விழா கடந்த சனிக்கிழமை 21.08.2010 நடாத்தப்பட்டிருந்தது. இவ்விழா சுவிற்சர்லாந்தில் புலம்பெயர் இலங்கையர் எனும் அமைப்பின் பெயரால் நடாத்தப்பட்டமை சட்டவிரோதமானது என அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான நந்தன என்பவர் மேற்படி அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளபோதும் தனது சுய சம்பாதிப்புக்காக அமைப்பின் பெயரால் இவ்விழாவினை நடாத்தியிருந்தமை சட்டவிரோதமானது எனவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளதாகவும் , நந்தனவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஏற்பாடாகியுள்ளதாகவும் “Sinhale Hot News” எனும் இணையம் தெரிவிக்கின்றது.

அச்செய்தியில் நந்தன ஓர் தெருச்சண்டைக்காரன் எனவும் பல இலங்கையர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த குற்றச்செயல்களுக்காக ஜேர்மன் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் , சுவிற்சர்லாந்து தமிழ் சமுகத்திடையே காணப்படக்கூடிய குற்றவாளிகளுடன் இணைந்தே இவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதள்களில் தலைவர் என கையொப்பம் இட்டிருந்த நபர் புலிகளுக்கான செயற்பாட்டாளர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலுக்காக செக்கோசிலோவாக்கியா நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டிருந்தவர் எனவும் அவ்விணையம் தெரிவிக்கின்றது.

மேற்படி நந்தன எனும் நபரை தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் சகல நிகழ்வுகளுக்கும் ஒர் விருந்தினராக அழைக்கும் வழமையை கொண்டுள்ளமையை சுவிற்சர்லாந்தில் இடம்பெறும் அண்மைக்கால நிகழ்வுகளில் அவதானிக்க முடிந்துள்ளது. நிகழ்வுகளுக்குவரும் இவர் அங்குள்ள மக்களை புகைப்படம் எடுத்துச் செல்வதை வழமையாக கொண்டுள்ளார்.

புலிகளின் அழிவிற்கு பின்னர் சுவிற்சர்லாந்தில் புலம்பெயர் இலங்கையர் எனும் அமைப்பினை சுவிற்சர்லாந்து வாழ் சிங்கள , தமிழ் , முஸ்லிம்கள் இணைந்து உருவாக்கினர். அவ்வமைப்பிற்கான நிர்வாக தேர்வு இடம்பெற்றபோது அமைப்பின் தலைவர் , செயலாளர் உட்பட சகல முக்கிய பொறுப்புக்களும் சிங்களவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பாண்மையாக உள்ளபோது மேற்படி தெரிவுகள் பொருத்தமற்றது என்ற அதிருப்தியில் பலர் இவ்வமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து ஒதுங்கி கொண்டனர்.
நாளடைவில் அமைப்பின் தலைவியாகிய உடுகம்பொல மற்றும் பொதுச் செயலாளரான நந்தன விடையே மோதல் ஏற்பட்டு அமைப்பு பிளவு பட்டுள்ளது. இம்மோதல்களுக்கு நிதிமோசடி காரணம் என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக