திங்கள், 2 ஆகஸ்ட், 2010

எரிகிறது காஷ்மீர் : துப்பாக்கிச்சூடு தொடர்கிறது; ரத்த ஞாயிறு பலி உயர்வு

போலீஸ் ஸ்டேஷன் தீ வைப்பு : கடந்த 3 மாத காலமாக நடந்து வரும் இந்த வன்முறை சம்பவத்தில் இது வரை 30 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த 3 நாட்களில் 15 பேர் ஆவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறைகும்பல் , பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுதல், எதிராக துப்பாக்கி சூடு என சம்பவம் அரங்கேறி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ( நேற்று ) மட்டும் பல அரசு கட்டிடங்கள் தாக்கப்பட்டன. போலீஸ் ஸ்டேஷன் தீ வைக்கப்பட்டது. இதில் ஸ்டேஷனில் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றி வைக்கப்பட்டிருருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 4 பேர் இறந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். தொடர்ந்து பாம்பூர், புல்வாமா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இன்று (திங்கள்கிழமை) மாலையில் குப்வாரா, புல்வாமா பகுதியில் புதிய கலவரம் வெடித்தது. அதாவது டில்லியில் ஓமர் பேட்டிக்கு பின்னர் கலவரம். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர். 15 ‌பேர் காயமுற்றனர்.
கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்படும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் மக்கள் அமைதி காத்திட வேண்டும் என மாநில முதல்வர் உமர்அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு மட்டும் தனித்து அமைதியை ஏற்படுத்த முடியாது . அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் பாதுகாப்பு அமைச்சக குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் எதுவும் முக்கிய முடிவுகள் எடுத்தபாடில்லை.
 
தீர்க்கமான முடிவுக்கு காங்., யோசனை: முதல்வர் உமர் அப்துல்லா இன்று ( திங்கட்கிழமை ) டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில நிலவரம் குறித்து ஆலோசித்தார். பொதுவாக காங்., மற்றும் காங்., ஆதரவு பெற்ற கட்சிகள் ஆளும் மாநிலத்தில் வன்முறை எழும்போதெல்லாம் காங்., தீர்க்கமான முடிவு எதையும் எடுக்க யோசிக்கிறது. மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் இன்றும் வன்முறை வெடித்து பரவி வருகிறது. இங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக காஷ்மீர் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
 
பார்லி.,யில் அத்வானி விளக்கம் கேட்டார் : ஜம்மு காஷ்மீர் என்ன நடக்கிறது என்ற நிலவரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அரசு விளக்க வேண்டும், வன்முறை, குழப்பம் காரணமாக கட்டுப்படுத்த உள்துறை அமைச்சகம் சபைக்கு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி லோக்சபாவில் பேசினார்.
 
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்; காஷ்மீர் ஒரு சென்சிடிவ் மாநிலம் அங்குள்ள பிரச்னைகள் குறித்து நான் அறிவேன். நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த சில நாட்களில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்த பிரச்னை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்கிறேன் என்றார். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை டில்லியில் சந்தித்து பேசுகிறார். காஷ்மீர் நிலவரம் குறித்து நேற்று மாலை முதல் மத்திய அரசு விவாதித்து வருகிறது.
கலவரக்காரர்களுக்கு ஒமர் அப்துல்லா எச்சரிக்கை : பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஒமர் அப்துல்லா கூறுகையில்; ஜம்முவில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு அடிப்படை காரணம் அரசியல் ரீதியானதே என்றார். இங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசியல் தீர்வை ஏற்படுத்துவது, வேலையின்மை அகற்றுவதும் எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும், காஷ்மீர் தொடர் கலவரம் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
கலவரக்காரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பிரிவினைவாதிகள் முன்நிறுத்தும் பிரச்னைக்கு தீர்வு காண அரசியல் மற்றும் நிர்வாக அளவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். எனவே மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஊரடங்கு உத்தரவு தீவிரமாக செயல்படுத்தப்படும். மகக்ள் சட்டத்தை கையில் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 
குறிப்பாக ஆந்திராவில் தனி மாநிலம் கோரி எழுந்த வன்முறையில் தீக்கொழுந்து விட்டு எரிந்து தானாகவே அணைய முடிந்தது. இங்கும் ராணுவம் வரவழக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தை பொறுத்த வரை ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சி, மத்தியில் ஆளும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் உமரின் தந்தை பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராக இருக்கிறார். எனவே காங்.., அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்துகிறது. வன்முறையை அடக்கிட நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் விரைவில்..,

sundar - Mumbai,இந்தியா
2010-08-02 15:34:19 IST
மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லையே? என்ன கேள்வி இது? எவ்வளவு வேலை அவர்களுக்கு! மோடி அரசாங்கத்தை தொந்தரவு செய்யணும், வேற எதாவது கேசு இருந்தா சிபிஐ கிட்ட குடுக்கணும். இதையல்லாம் விட்டுவிட்டு யாராவது பிரச்சனைய தீர்க்க போவாங்களா!...
தமிழன் - Chennai,இந்தியா
2010-08-02 15:34:08 IST
இதை தீர்ப்பது மிக எளிது. காஷ்மீரில் மற்ற மாநில மக்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவித்தால் போதுமானது....
குருநாதன் - Singapore,இந்தியா
2010-08-02 14:28:54 IST
வருத்தமாக உள்ளது, யாரை குறைசொல்லுவது என்பதைவிட, யார் இதை திர்த்து வைப்பது என்பது கூட புரியாத புதிர்.....
பாட்ஷா - thanjavur,இந்தியா
2010-08-02 14:02:03 IST
இது மிகவும் கவலை தர கூடிய விசயமாக இருக்கிறது. உடனடி நடவடிக்கை தேவை. கைவிட்டு போனவுடன் வருந்தி பயனில்லை எதிராளி இதை சாதகமாக பயன்படுதுவதற்கு முன்பு நாம் எதாவது செய்ய வேண்டும்.அந்த மக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தி மீண்டும் மீண்டும் பல உயிர் போவதற்கு காரனாக இருக்கிறார்கள். மதிய அரசு உடனடியாக ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தி புதிய தேர்தல் நடத்த வேண்டும்.நாட்டை காப்பாற்றுங்கள் தயவுசெய்து...
MANOHAR - chennai,இந்தியா
2010-08-02 13:58:23 IST
இந்தியா உருப்பட வேண்டும் என்றால் இந்த தரித்திரம் பிடித்த காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒழித்து கட்ட வேண்டும். பிரணாப் முகர்ஜி ஒருவரை தவிர யாராவது சிறப்பாக செயல்படும் தலைவர்கள் இருக்கிறார்களா?...
பழனியப்பன் - Madurai,இந்தியா
2010-08-02 13:36:51 IST
அங்கே காஷ்மீர் பற்றி எரிகிறது. ஆனால் இங்கே மதுரையில் உள்துறை அமைச்சருக்கு பிரமாண்ட விழா கோலம். வாழ்க பாரதம், வாழ்க காங்கிரஸ், வாழ்க சோனியா, வாழ்க முட்டாள் இந்திய பொதுமக்கள்....
சுரேஷ் - singapore,இந்தியா
2010-08-02 13:32:46 IST
காங்கிரசு நம் நாட்டுக்கே வேண்டாம்...
ர.அண்ணாதுரை - sivakasi,இந்தியா
2010-08-02 13:19:56 IST
பாகிஸ்தானின் தூண்டுதல் காரணமாக இந்திய பிரிவினைவாதிகள் செய்யும் அட்டூழியம் தான். இந்தியனாய் வாழ் இல்லையேல் இந்தியாவை விட்டு வெளியேறு இதுதான் முடிவு...
காஷ்மிரி - Chennai,இந்தியா
2010-08-02 13:18:40 IST
ஏற்கெனவே கொஞ்ச நஞ்சம் இருந்த இந்து ,சீக்கியரை விரட்டி விட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமே காஷ்மீர் சொந்தம் போல் உண்டாக்கி விட்டனர். இதற்கு காங்கிரசும் உடந்தை.முஸ்லிம்கள் பெரும்பான்மை இருக்கும் வரை காஷ்மீர் பிரச்சினை தீராது.சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மற்ற மாநிலத்தவர் கணிசமாக குடியேற்றப்பட்டால் மட்டுமே தீர்வு ஏற்படும்....
Jehan - Malee,மாலி
2010-08-02 13:07:58 IST
காஷ்மீர் பிரச்சனை என்பது காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து வைத்தது. பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாவாக இருப்பது காங்கிரஸ் தான் என்பது எத்தனை இந்தியனுக்கு தெரிய போகிறது? ராகுல் காந்தியின் வெள்ளை தோலுக்கு வோட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இதை மாற்ற முடியாது....
பாரதி - Singapore,இந்தியா
2010-08-02 13:06:08 IST
வடக்கே காக்கா ஆயி போனதுக்கெல்லாம் கலவரம் பன்றாணுங்கள். தெற்கே தமிழனத்தை அழிச்சாலும் கண்டுகொள்ள ஆளில்லை....
இபு பாரிஸ் - SARCELLES,பிரான்ஸ்
2010-08-02 12:35:48 IST
இந்தியாவில் ஒருங்கிணைந்த மற்ற மாநிலங்களை போல காஷ்மீர் இருந்தால் நடவடிக்கை யே வேறு.அங்கு நடப்பது பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்னை.காஷ்மீர் சுதந்திர போராட்டம். இந்திய சங்கபரிவார் பொய்யான தேசபக்தி கும்பலுக்கு சரியான மரண அடி காத்துள்ளது. பிஜேபி ஆட்சியாக இருந்தால் இந்தியாவில் இதுவரை தாலிபான் புகுந்து இருப்பான்....
Arun solomon - Tirunelveli,இந்தியா
2010-08-02 12:27:02 IST
Your news are good...
பாலமுருகன் - madurai,இந்தியா
2010-08-02 12:25:52 IST
மக்கள் நலனை கவனத்தில் கொண்டு இந்த அரசு விரைவில் முடிவு காண வேண்டும் . இங்கும் அரசியல் லாபம் தேட கூடாது....
அபுதய்மயா - dammamamamamamam,செனகல்
2010-08-02 12:13:44 IST
இந்திய ஆனாலும் சரி, பாகிஸ்தான் ஆனாலும் சரி, சீனா ஆனாலும் சரி, எல்லா nuclear நாடுகளுக்கும் இந்த சொர்க்க பூமியை ஆக்ரமிக்கிறதில் ஒரே கருத்தே உள்ளது.. பாவம் வழக்கம் போலே பாமர காஷ்மீரிகள் தான்...
Kanavaan - Nellai,இந்தியா
2010-08-02 12:03:30 IST
ஒரு காலத்தில் பாரதம் பாகிஸ்தானால் பற்றி எரிந்தது. இன்று காஷ்மீரால் பற்றி எரிகிறது. என்று முடியுமோ இந்த தீவிர வாதம். இப்படி பட்ட சமூக விரோதிகளை கண்டவுடன் உடனே சுட வேண்டும். அரசு செய்யுமா?...
பரணி - madurai,இந்தியா
2010-08-02 11:38:17 IST
சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை பெறுவதற்காக திவிரவாதத்தை வளர்க்கும் அரசு காங்கிரஸ் பிடிபட்ட தீவிரவாதிகளை என்ன செய்தார்கள். ஆனால் ராஜீவ் காந்தியை கொன்ற பிரபாகரனை மற்றும் அன்பு தமிழர்களை கொல்ல மட்டும் முடியும்....
விஜயன் - kuwaitcity,குவைத்
2010-08-02 11:04:37 IST
காங்கிரஸ் ஆட்சியில் கலவரம் தாண்டவமாடுது. முதிர்ந்த அரசியல்வாதிகள் ஞானமில்லாத ஆட்சி நடத்துகிறார்கள்.ஒரு உயிரின் அருமை தெரியாத சுயநல கட்சி,அரசியல்வாதிகள். நாட்டு மக்களே உங்களை நீங்களே அழிக்காதிர்கள்! ஜெய் இந்தியா! விஜயன்,குவைத்....
பரணி - madurai,இந்தியா
2010-08-02 10:34:26 IST
காங்கிரஸ் அரசு வந்தால் கலவரம் சட்டம் ஒழுங்கு சீர் குலையும் என்பது தெரிந்த விஷயம் தான். முதலில் மத்திய அரசை மேலும் காஷ்மீர் அரசையும் கலைக்க வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக