வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஈராக்கிலிருந்து யுஎஸ் கடைசி படையும் கிளம்பியது-ஆனால்..

கபாரி கிராசிங் (குவைத்): ஈராக்கை விட்டு அமெரிக்காவின் கடைசி தாக்குதல் படைப் பிரிவு கிளம்பியுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இந்தத் தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

கடைசியாக கிளம்பிய அமெரிக்கப் படைப் பிரிவு 4வது ஸ்டிரைக்கர் பிரிகேட் மற்றும் 2வது இன்பேன்டரி டிவிஷன் படையாகும். ஈராக் எல்லையை இந்தப் படையினர் கடந்தபோது வாகனங்களில் இருந்த வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தோஷமாக வாழ்த்து கூறிக் கொண்டனர். அமெரிக்க கொடிகளை உயர்த்திப் பிடித்து பறக்கச் செய்தனர்.

பெரும் நிம்மதிப் பெருமூச்சுடன் அவர்கள் சென்றதைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஐந்து மாதங்களாகி விட்டது ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்து. இந்த கால கட்டத்தில் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் சந்தித்த நஷ்டங்கள், பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. இது அமெரிக்காவில் பெரும் சர்ச்சைகளை கிளப்பி விட்டது.

இதையடுத்து படிப்படியாக அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வந்தன. தற்போது கடைசி தாக்குதல் படைப் பிரிவும் கிளம்பி விட்டது.

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து திரும்பப் பெறப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் கிளம்பிப் போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளம்பிச் சென்றது தாக்குதல் நடத்தும் படைகள் மட்டுமே. சில நிர்வாகப் படைகள் தொடர்ந்து இராக்கிலேயே உள்ளன. இவர்கள் தேவைப்பாட்டால் தாக்குதலிலும் ஈடுபடுவர். இந்த நிர்வாகப் படைகளில் 50,000 வீரர்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், அதில் அத்தனை பேர் இல்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் தனது தாக்குதல் படைப் பிரிவுகளை முழுமையாக வாபஸ் பெறவில்லை என்றும் அமெரிக்கா மறுத்துள்ளது.

இந் நிலையில் இராக்குக்கான புதிய அமெரிக்கத் தூதராக ஜேம்ஸ் ஜெப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பதிவு செய்தவர்: அண்ணன் புஷ் வாழ்க
பதிவு செய்தது: 19 Aug 2010 8:19 pm
மத சகிப்புத்தன்மையை புரிந்துகொள்ளாத கொலைகார கூட்டங்களுக்கு ஆப்பு வைத்த அண்ணன் புஷ் வாழ்க. அரபு அடிமை அசுரர் கூட்டங்கள் உங்களை திட்டினாலும் நீங்களே கல்கி ஆவீர்

பதிவு செய்தவர்: காயத்ரி
பதிவு செய்தது: 19 Aug 2010 8:03 pm
இந்த வீரர்கள் (?!!!) அமெரிக்காவுல இறங்கிய உடனே, இவனுக பொண்டாட்டிக, கேர்ள் பிரண்டுக அப்படியே பாய்ஞ்சு வந்து இவனுக மேல தொத்திக்கிவாலுக. இவனுகளும் முத்தம் கொடுப்பானுக. இதை படம் பிடிச்சி உலகத்துல உள்ள எல்லாம் பத்திரிக்கைகாரனுகளும் போடுவானுக. அப்புறம் இவனுக ஊருக்குள்ள திறந்த பஸ்ஸுல போவானுக, வழிநெடுக மக்கள் கொடியை ஆட்டிகிட்டு கைத்தட்டி வரவேற்பானுக. இவனுக சண்டைல, இடிபாட்டுல,வெடிகுண்டுகளால செத்த சாமானிய மனிதர்களைப் பத்தி எவன் கவலைப் படுறான். போங்கடா நீங்களும் உங்க மனிதாபிமானமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக