வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது இளங்கோவன் அதிரடி


திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்று அதிரடியாக அறிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.  டி.எஸ்.விஜயகுமாரின் மகளின் திருமணத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் கூட்டணியைப்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,   ‘’திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது.

  எங்களுக்குள் கூட்டணி பற்றி கருத்து தெரிவிப்பது என்றால் , நாங்கள் குலாம் நபி ஆசாத்திடம் தெரிவிப்போம்.
அவர், அதை தலைமையிடம் தெரிவிப்பார்.  இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,    மத்திய அரசின் திட்டங்கள் எவை எவை என்பது மக்களிடம் சரியாகப் போய்ச்சேரவில்லை.

அதனால் ஒன்றாம் தேதி
முதல் முப்பதாம் தேதி வரை காங்கிரஸில் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கப்போகிறார்கள்.
மத்திய அரசு செயல்படுத்தும் 100நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக 100 வழங்குகிறது.  ஆனால்
தமிழகத்தில் பல ஊராட்சி மன்றத்தலைவர்கள் 60 ரூபாய் 80ரூபாய் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இதனை  முதல்வர் கருணாநிதி அரசு தடுக்க வேண்டும்.  உண்மையான கூலியை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக