செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

காதலர்கள் இருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக்

வடக்கு ஆப்கானில் காதலர்கள் இருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்றனர். காதலர்களின் பெற்றோர் இஸ்லாமிய பூசாரிகளிடம் புகார் கொடுக்க இருவரையும் கைது செய்த தாலிபான்கள் இருவரையும் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்துக் கொன்றனர்.

தஷ்டே ஆர்ச்சி என்ற கடைவீதியில் இருவரையும் கல்லால் அடித்துக் கொன்றதாக குண்டூஸ் மாகாண ஆளூநர் மொகமட் ஓமர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இஸ்லாமிய மதக் குருமார்கள் கண்டிப்பான இஸ்லாமிய மத விதிகளைக் கடைபிடிக்காதவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

அதன் பிறகு நடக்கும் இரண்டாவது கொலைச் சம்பவமாகும் இது.

காதலர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் வேறு இடங்களில் வரன் பார்த்து வைத்திருப்பதாக அவரகள் புகார் கொடுத்ததையடுத்து இந்தக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் தாலிபான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

1996-2001ஆம் ஆண்டுகளில் ஆப்கானில் ஆட்சியிலிருந்த போதே தாலிபான்கள் மதத்தின் பெயரால் இது போன்ற கொடூரமான கொலைகளை தண்டனை என்ற பெயரில் நிறைவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக