வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஷவேந்திர சில்வா நியமனம் குறித்து பதில் கூற ஐ.நா மறுப்பு

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பதில் கூற மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான நியூயோர்கில் நேற்று நடைபெற்ற ஊடகவியாலர் சந்திப்பின் போது இது தொடர்பில் ஊடகவியலார் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி பதில் கூற மறுத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு நியமித்துள்ள நிலையில், இவ்வாறான நியமனத்தை பான் கீ மூன் ஏற்றுக் கொள்வாரா? என ஊடகவியாலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி, குறித்த நியமனம் குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக