ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாகவும் சந்திப்பு இடம்பெற்ற போது, ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. எனினும் இதற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இணக்கத்தை மாற்றி ஜனாதிபதி முறைமையை மாற்ற விருமபவில்லை என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, தாம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு உதவவேண்டும் என ஜனாதிபதி ரணிலிடம் கோரியுள்ளார் இதன் போது அதிர்ச்சிக்குள்ளான ரணில் விக்கிரமசிங்க, எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தரப்புகள் தெரிவித்துள்ளன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக