சனி, 28 ஆகஸ்ட், 2010

இலங்கை அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது


சிறீலங்கா முஸ்லீம் காங்கரஸ் இலங்கை அரசுக்கு தனது ஆதரவினை வழங்க முன் வந்துள்ளது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் பலம் மூன்றில் இரண்டைவிட அதிகமாகியுள்ளது. தற்போது அரசுக்கு சட்டம் இயற்றுவதில், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான சட்டமியற்றலுக்கும், அதனை பாராளுமன்றத்தில் மூலம் சட்டமாக்குவதற்கும் தேவையான பலம் கிடைத்துவிட்டது. தற்போது தேவையெல்லாம் நல்ல மனமும், சிந்தனைகளும்தான். இதனை இலங்கை அரசு செய்யும் என எதிர்பார்ப்போம். ஜேஆர் ஜெயவர்த்தனா அரசு ஐந்தில் நான்கு பெரும்பான்மை பெற்றிருந்து அதனை தமிழ் மக்களுக்கு அடி போடவே பாவித்தார். அதனுடன் ஒப்பிடுகையில் சிறிது குறைந்த ஆனால் தேவையான பலத்தையுடைய மகிந்த அரசு பாராளுமன்றத்தில் சரியான நியாயமான சட்டங்களை இயற்றி வரலாற்றில் இடம் பிடிக்குமா? தமிழ் மக்களிடம் தாமும் இலங்கையர் என்ற தேசப்பற்றை வளர்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக