அவர் தன்னைத்தானே கட்டிக் கொண்டதாக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நீதித்துறை திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், டெங்கு நுளம்புகளால் இந்நாட்டில் 200 க்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினால் எனது உறவினரையும் இழந்துள்ளேன். அதனால் டெங்கு அபாயத்தை உணர்ந்தவனாகவும் இருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் சிறுபிள்ளைகள் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன். அதனால் தான் இதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று துடிக்கிறேன்.
சமூர்த்தி அதிகாரி ஒருவர் மரத்தில் கட்டப்பட்டது. தொடர்பில் என் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் நான் அந்த அதிகாரியை மரத்தில் கட்டவில்லை. டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் வேலைத் திட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது தவறு என்பதை உணர்ந்ததாலேயே அவர் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொண்டதுடன் ஏனையவர்களுக்கும் முன்மாதிரியாக நடந்து கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக