வியாழன், 5 ஆகஸ்ட், 2010
அஞ்சலியை நம்பி கருங்காலி ஆன களஞ்சியம்!
சுந்தரி எனும் பெயரில் அங்காடித்தெரு அஞ்சலியை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் மு.களஞ்சியம் தான்! தேவயானியின் மற்றொரு சகோதரர் மயூர் (நகுல் அல்ல) கதாநாயகராக நடிக்க களஞ்சியம் இயக்குவதாக இருந்த "சத்தமின்றி முத்தமிடு" படத்தில் சுந்தரியாக அறிமுகம் ஆக இருந்த அஞ்சலி, அந்தப்பட தி்ட்டம் ஆரம்பநிலையிலேயே கைவிடப்பட்டதால் "கற்றது தமிழ்" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனாலும், களஞ்சியத்தின் மீது உள்ள நம்பிக்கையில் "சத்தமின்றி முத்தமிடு" படத்தை அடுத்து அவர் இயக்குவதாக அறிந்த "வாலிபதேசம்", "என் கனவுந்தானடி" ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பூஜை போட்டிருக்கும் "கருங்காலி" படத்திலும் அஞ்சலியே நாயகி ஆகி இருக்கிறார். அஞ்சலியின் மார்க்கெட் உச்சத்தை கணக்கில் கொண்டு கருங்காலியையாவது உடனடியாக இயக்கி தயாரித்து கல்லா கட்டிவிட வேண்டுமென ஜரூராக களம் இறங்கி இருக்கிறாராம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள களஞ்சியம்! அடடே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக