புதன், 1 செப்டம்பர், 2010

தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்: நிருபமா ராவ்

கொழும்பு ஆக. 31: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.

இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

"எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம்' என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள  தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார்.

கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார்.வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார்.

பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியிடம் அவர் ஆலோசித்தார்.அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார். கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன. கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி, கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு.

நிருபமா கொழும்பு செல்வதற்கு முன், வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார்.கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.

ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ள்ஸ சந்திக்கிறார்.தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது. இதுதவிர கூடாரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.

சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது. தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.இதுதவிர, வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது. ரயில் பாதை அமைப்பது, துறைமுகம், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.



2010-09-01 13:45:52 IST
தமிழர்களின் தந்தை என கூறிக்கொள்ளும் கருணாநிதியே ஒன்றும் செய்ய இயலாத போது நிருபமா ராவ் மட்டும என்ன செய்ய முடியும்?இந்தியா தமிழர்களின் துரோகி.இதுதான் உண்மை....
Jehan - Malee,மாலத்தீவு
2010-09-01 13:45:00 IST
ஆஹா. வார்த்தைகள் வாயில் இருந்து விழுந்து விட்டது. தமிழனுக்கெல்லாம் இனி பொற் காலம் தான். ராஜபக்ஷே நீ இனி காலி. யாரெங்கே சிவப்பு கம்பளத்தை எடுத்து இந்த கோல்கேட் அழகியை வரவேற்று பாட்டு பாடுங்கள்....
தமிழன் - kuwait,இந்தியா
2010-09-01 12:47:06 IST
இன்னும் மிச்ச மீதி இருக்கான்னு பார்க்க போயிருக்காங்க .....
தம்பி - singapore,இந்தியா
2010-09-01 12:36:57 IST
ஹலோ சுரேஷ் tirupur, நீயும் ஒன்னோட தலைவன் மாதிரி பேசாதே. உலகத்துக்கே தெரியும் யாரு துரோகி என்று. நீயெல்லாம் ஒரு கிணத்து தவக்களை.நிருபமா முன்பு இலங்கையில் பணியாற்றியபொழுது இவர் இலங்கை தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்கும் ஆதரவுடன் செயல் பட்ட காரணத்தினால் இவரை சீனாவிற்கு இட மாற்றம் செய்யபட்டார், இலங்கையின் நெருக்குதல் காரணமாக....
venkatesan payari - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-01 12:36:05 IST
பிரபாகரன் மட்டும் நிச்சயம் வருவார்......
மணியன்.ராமசாமி - வடோடர,இந்தியா
2010-09-01 11:16:37 IST
இந்திய அரசு செலவில் கல்லறை?...
பாவேந்தன் - sydney,ஆஸ்திரேலியா
2010-09-01 10:30:41 IST
காடுமிராண்டிதனமான போரில் எண்ணற்ற குழந்தைகளும் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.இதற்கு துணைபோன நமது அரசு ,தனது கடமையை செய்ய தவறிவிட்டது. இது காலம் கடந்து செய்யபடுகிற உதவி. இந்திய சீன எல்லையில் சீனா தனது வலிமையை காட்ட துவங்கி உள்ளது. காஷ்மீரத்தை நமது பகுதியாக அது ஒத்துக்கொள்ளவில்லை. சீனாவிடம் பெட்டி பாம்பாய் அடங்கிவிட்டு, இந்த மக்களை எதற்காக கொடுமை படுத்துகிறீர்கள்...வரலாறு இதை கவனமாக பதிவு செய்து வருகிறது, அதை மாற்றி எழுத மனசாட்சி அற்ற இந்த அரசியல்வாதிகளால் முடியாது....
suresh - திருப்பூர்.,இந்தியா
2010-09-01 10:17:58 IST
ராஜாஸ்ஜி நீ ரொம்ப துள்ளாதே. ஜெயலலிதா தமிழர் மேல ரெம்ப அக்கறை உள்ளவர்தான். உங்கள் அம்மா என்ன சொன்னார்கள் தெரியுமா? போருன்னு வந்தால் தமிழ் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று .உன் அம்மாவை உலகம் மன்னிக்குமா...
அசோக் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-01 09:43:34 IST
இலங்கை தமிழரை மீட்க இவரை விட்டால் வேறு யாரும் இவ்வுலகத்தில் இல்லை. உலகத் தமிழர்களின் தாயே வாழ்க வாழ்க ....
வெங்கட் - துபாய்,இந்தியா
2010-09-01 09:10:11 IST
சோனியாவை வரலாறு மன்னிக்காது.congress தமிழகத்தில் வராது.ஆனால் பிரபாகரன் மட்டும் நிச்சயம் வருவார்...
srini - chennai,இந்தியா
2010-09-01 08:55:57 IST
ஒரு சாயலில் பார்த்தால் சந்திரிகா மாதிரி இருக்கு, அதனால அனுப்பி வச்சானுங்க போல....
srini - chennai,இந்தியா
2010-09-01 08:53:48 IST
நீங்க ஒன்னும் ஆணியே புடுங்க வேண்டாம். இலங்கை அரசும் சிங்களவர்களும் செய்த கொடுமையை விட இந்தியர்களும் தமிழக தானை தலைவரும் செய்த துரோகம் கேவலமானது. அய்யா விட்டு விடுங்கள்,...
பாலகுமார் - Hosur,இந்தியா
2010-09-01 07:51:25 IST
திருமதி நிருபமா இலங்கைக்கு செல்வதற்கு முன்னால் தமிழக மீனவர்களுக்காக எதாவது செய்திருக்கலாம் என்பது என் கருத்து....
விஜய் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-01 07:41:29 IST
மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் நாடகம் ரொம்ப நல்லா இருக்கிறது....
வெங்கடாசலம் நாராயணன் - பெங்களூர்,இந்தியா
2010-09-01 07:18:21 IST
நான் திருமதி.நிருபமா அவர்களை நம்புகிறேன்.இவர்கள் நிச்சயம் நல்லது செய்வார்கள். இவர்கள் முன்பு வேலை செய்த இடங்களில் எல்லாம் நல்ல பெயர். மிக கடுமையான உழைப்பாளி. நல்ல வேளை இந்திய தமிழர்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இவர் தான் இதை செய்ய வேண்டும்.இலங்கை தமிழர்கள் கொஞ்சம் சந்தோஷப்படலாம் ....
tha.sumi - DohaQatar,கத்தார்
2010-09-01 07:14:24 IST
My dear friend, Now India has understood Srilanka real cinema shooting.Whatever India do helps Srilanka government Its all waste.In future india going to meet several border conflict with Srilanka.in that time india realise why we supported to distory LTTE.Time is very near and we will wait &see Sumi...
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
2010-09-01 06:44:28 IST
கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வராமலா போகும்? ஒத்திகை முடிந்ததும் நாடகம் அரங்கேறாமலா போகும்? இறுதியி்ல் குற்றவாளி நடிகர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போகும்?...
சுல்பிகர் - சென்னை,இந்தியா
2010-09-01 06:42:33 IST
ஆமா, தமிழர்களே உதவாத போது இந்த மலபாரி என்ன செய்ய போகிறார் ?. இவர் தூதுவராக பணிபுரிந்த போதும் தமிழர்களுக்கு ஆதரவாய் இருக்கவில்லையே, இப்போது எதை கிழிக்கப்போகிறார்?...
Maharajan - Chennai,இந்தியா
2010-09-01 06:29:39 IST
India seikira endha udhavium tamilar-galidam poi seraadhu. Tamilargal india meel nambikkai elandhu vettarkal....
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-09-01 03:36:34 IST
INDIAN government behaved pathetically during the LTTE-Srilanka war. Other neighbouring countries remained quite because they did not have a stake in this war. Due to our tamil link, India should have played a part in negotiating with LTTE and Srilanka in creating an independent state inside Srilanka and should have helped tamil win something there. 1000s of Tamils got killed in this war and it is a lost case for tmails. India do not have anything to help now. Meaningless trip....
rajasji - klang,மலேஷியா
2010-09-01 03:24:12 IST
கடல் அலைகள் ஒருத்தனை எடுத்துக் கொண்டு போகிறது ! ...சிறந்த நீச்சல் வீரர்கள் ...ராணுவ கப்பல்கள் ...ஹெலிகாப்டர்கள் ...இருந்தும் இவைகளை பயன்படுத்தி மீட்காமல் .. ஒரு பொம்பளைகிட்ட நாட்டுப் படகை கொடுத்து மீட்டுவர அனுப்புவது வெட்கக்கேடு  !....இந்த அவமானத்தைதான் தலைகுனிவைத்தான் தமிழ் இனத்திற்கு கருணாநிதி உருவாக்குகிறார் ! உலக தமிழ் இனம்..வரலாறு கருணாநிதியை மன்னிக்காது !!! @ rajasji  ...
ஆனந்தன் - சென்னை,இந்தியா
2010-09-01 02:41:29 IST
வஞ்சகர்கள் மேனன் , நாராயணன், கிருஷ்ணா , கருணாநிதி , சோனியா வரிசையில் நிருபமா .இவராவது இலங்கை தமிழரை மனிதர் என்று மதித்து வாழ வைப்பாரா ??...
சக்ரபாணி ர - சென்னை,இந்தியா
2010-09-01 00:31:56 IST
கூரை ஏறி கோழி பிடிகமுடியதவள் வானம் ஏறி வைகுந்தம் போனாளாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக