செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

முதல்வருடனான சந்திப்பு ஜெயலலிதா புறக்கணிப்பு

சென்னை : மாநில தலைமைத் தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா கலந்து கொள்ளாததால், முதல்வருடனான சந்திப்பு நிகழவில்லை.

மாநில தலைமைத் தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணனின் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைமைத் தகவல் ஆணையரை முதல்வர், அவரால் நியமிக்கப்படும் மற்றொருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். கடந்த முறை, ராமகிருஷ்ணனை தேர்ந்தெடுத்த போது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அலுவலகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் வந்திருந்தார்.அதேபோல, இம்முறை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதியின் அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம், கருணாநிதியும், ஜெயலலிதாவும் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படுமென அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது.

புதிய தலைமைத் தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் நடந்தது. இதற்கான அழைப்பு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. முதல்வரும், நிதியமைச்சர் அன்பழகனும் எதிர்க்கட்சி தலைவருக்காக காத்திருந்தனர்.ஆனால், ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு நேற்று வரவில்லை. எனவே, மூன்று பேரில் ஒருவர் வராவிட்டாலும், பெரும்பான்மை அடிப்படையில் முதல்வரும், நிதியமைச்சரும் சேர்ந்து புதிய தலைமைத் தகவல் ஆணையருக்கான பெயரை முடிவு செய்தனர். இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்ததும், புதிய தலைமைத் தகவல் ஆணையரை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.புதிய தலைமைத் தகவல் ஆணையராக, தற்போதுள்ள தலைமைச் செயலர் ஸ்ரீபதி தேர்ந்தெடுக்கப்பட்டால், புதிய தலைமைச் செயலருக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

RAZIN - CHENNAI,இந்தியா
2010-08-24 05:37:45 IST
ஆமா இந்த அம்மா ஒபாமா வந்து காத்திருந்தா கூட வராது.நீங்க காத்து இருகுரதுகுலாம் வருமா?.அவுங்களுக்கு கொடநாடு ,சிறுதாவூர்,இங்கெல்லாம் போறதுக்கே நேரம் பத்தலை.இதுக்கு பேருதான் திமிரின் உச்ச கட்டம்....
செந்தில் - India,இந்தியா
2010-08-24 05:21:10 IST
அரசியல் நாகரிகம் தெரியாத பாட்டிகிட்ட இதெல்லாம் எதிர்பார்க்க கூடாது,அழகிரி கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை!அட கட்சி சார்பா அந்த கைக்கூலி பன்நீரையாவது அனுப்பி இருக்கலாமே?...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-24 04:14:25 IST
விஜயகாந்த் தவிர அவர் மனைவி முதல்கொண்டு அனைவருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நெருக்கடி கொடுப்பதாக இன்னொரு பத்திர்க்கையில் வெளிவந்தது.... விஜயகாந்த் இப்பொழுது செய்வது மிரட்டல்... அரசியல் தெரியலனா அமைதியா இருங்க, இந்த ரவி தோஹாவுக்கும் சேர்த்து தான்... மஞ்சள் துண்டை பற்றி ஏதாவது எதிரா செய்தி வந்தால் நீங்கள் காணாமல் போய்விடுகிறீர்கள்.. அரசியல எதுவும் நிரந்திரம் இல்லை... தனியாக நின்றால் டெபாசிட் கிடைக்காது என்று விஜயகாந்துக்கு நன்றாக தெரியும், இருந்தாலும் மிரட்டி அதிக தொகுதிகளை வாங்க திட்டம். பொதுவா நீங்க கருத்து எழுத பத்து மணி நேரமா எடுத்துகொள்கிரீர்கள்? கருத்து கூற ஐந்து நிமிடம் போதும், இதில் எப்படி பல்பு வாங்க முடியும்? ஏன் நீங்கள் பல்பு வாங்கினீர்களோ? அந்த அனுபவம் பேசுதோ?...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-24 03:45:56 IST
இந்தம்மாவுக்கு அப்படி என்னாதான் மனசுக்குள்ள பெரிய எலிசபத்து மகாராணின்னு நெனப்போ என்னமோ தெரில. மவனே, ஆட்சில இல்லேன்னு தெரிஞ்ச ஒடனே, மக்களுக்காக ஒண்ணுமே பண்ண மாட்டேங்கிது. கடைசி நிமிசத்தில வந்து ஓவரா சீன போடுது. இப்போ அந்த மனுசன பாத்து பேசுரதுல்ல என்ன பெரிய பிரச்சினை. அவரு தான் வடநாடு மாறி இங்கயும் ரெண்டு பெரும் ஒண்ணா சேந்து ஒழுகனும்... ஒண்ணா சேந்து ஒழுகனும்... னு அலுவராறு இல்ல. அப்புறம் என்ன? ட்ரை பண்ணிதான் பாக்கிறது. இவருதான் கொஞ்சம் இந்த அசிங்கமா பேசுறத நிறுத்தி தொலைக்கலாமில்ல. இப்போ இவரு மட்டும் இல்லாம பசங்களே வேற விட்டு அசிங்கமா பேச வெக்கிறாரு. அப்புறம் எவ வருவா இவருக்கிட்ட பேசுறதுக்கு. இப்படி எல்லாம் இருக்கிறதுனால தான் எவனும் ஒரு வாய் தண்ணி கூட விட மாட்டேங்கிரானுக நமக்கு....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-24 03:44:44 IST
மஞ்சள் துண்டும், எங்க அம்மாவும் தனியாக சந்திப்பது, பாட்ஷா படத்தில் பாட்ஷவாகிய ஜெயலலிதா, அந்தோனியாகிய கருணாநிதியை சந்திப்பதாகும். அப்படி தனியாக அம்மா சந்திக்க சென்றிருந்தால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும், நல்ல வேலை செல்லாதது, ஆனால் பன்னீர்செல்வம் கலந்து கொண்டதாக நக்கீரன் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. ஜோபெட்டு, உன்னோடைய கருத்துக்களை படித்து சில சமயம் நான் நினைப்பேன், ஏன் இவ்வளவு லூசு தனமாக கருத்து கூறுகிறார் என்று... உங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி இல்லை... நேற்றைய விஜயகாந்த் செய்தியில் தனியாக நிற்க்கபோவதாக சொல்லவில்லையே, கூட்டணி என்று தானே கூறினார், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... இன்னும் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கிறது, அதற்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காங்கிரஸ் திமுகவை மிரட்டுவதை போல விஜயகாந்த் அதிமுகவை மிரட்டுகிறார்... விஜயகாந்த் 80 தொகுதிகள் கேட்டதாகவும், அதிமுக தரப்பில் ஐம்பது தொகுதிக்கும் கீழ் தான் கொடுக்கப்படும் என்றும் விஷயம் வந்தது, ஒரு வேளை காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்தால், அவர்களுக்கும், விஜயகாந்துக்கும் சேர்த்து அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாது என்பதால் விஜயகாந்தை ஒரு பக்கம் வைத்துள்ளார், காங்கிரஸ் திமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் எங்க அம்மா கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் விஜயகாந்த், அவர் கேட்க்கும் தொகுதிகளை கொடுத்திடுவார்.......
Mohammed ali - Trichy,இந்தியா
2010-08-24 03:10:53 IST
this lady doesn't have the political decency in public life. she is unfit to rule the state. All she is interested is to capture POWER to loot the state. This is the fate of TN people....
ராஜன் - சேலம்,இந்தியா
2010-08-24 02:53:50 IST
பகுதி 1. ஜெய‌ல‌லிதா எதிர்க‌ட்சித்த‌லைவ‌ரா? இல்லை இல்லை அவ‌ர் எத‌ற்கும் லாய‌க்கில்லாத‌ த‌லை(வி). த‌மிழ்நாட்டை கொள்ளைய‌டித்தார். த‌மிழ‌னை மொட்டைய‌டித்தார். த‌மிழ்நாட்டுக்கு வ‌ர‌வேண்டிய‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளை செய‌ல்ப‌டுத்த‌ ம‌றுத்தார். ஆண‌வ‌மும், அக‌ம்பாவ‌மும் கொண்டு அண்டைமாநில‌ முத‌ல்வ‌ர்க‌ளை ச‌ந்திக்க‌ ம‌றுத்து காவிரிபிர‌ச்சினைக்கு தீராம‌ல் பார்த்துக்கொண்டார். முல்லைபெரியாறு, பாலாறு போன்ற‌ த‌மிழ‌க‌விவ‌சாயிக‌ளின் ஜீவாதார‌ பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ எந்த‌ செய‌லிலும் ஈடுப‌ட‌ம‌றுத்தார். தொழில்வ‌ள‌ர்ச்சியை தொலைத்தார். மின்சார‌ம் சார்ந்த‌ எந்த‌ திட்ட‌மும் செய‌ல்ப‌டுத்தாம‌ல் த‌மிழ‌க‌த்தின் எதிர்கால‌த்தை இருளில் மூழ்க‌டித்தார். விலைவாசியை உய‌ர்த்தினார். விவ‌சாயிக‌ளை எலிக்க‌றி தின்க‌ வைத்தார். ஏழைக‌ளின் தாலி அறுக்க‌ டாஸ்மார்க் கொண்டுவ‌ந்து, ச‌சிகும்ப‌லின் பினாமி க‌ம்பெனி மிடாசை வ‌ள‌ர்த்தெடுத்தார். விஜ‌ய்ம‌ல்ல‌யாவின் கையாட்டி பொம்மையானார். தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் நில‌ங்க‌ளை கொள்ளைய‌டித்து ஆட‌ம்ப‌ர‌ சொகுசு ப‌ங்க‌ளா க‌ட்டினார். ஆயிர‌ம் ஏக்க‌ரில் கொட‌னாடு எஸ்டேட் வாங்கினார். காஞ்சி ச‌ங்க‌ர‌ர் முத‌ல் (ச‌சி)ந‌ட‌ராஜ‌ன் செட்ட‌ப் செரினாவ‌ரை பொய் கேஸ் புனைந்து ச‌ட்ட‌த்தை கொலை செய்து, ஜெயிலில் போட்டார். கோடி கோடியாய் கொள்ளைய‌டித்து, நாட்டை குட்டிசுவ‌ராக்கினார். வேளாண் க‌ல்லூரி மாண‌விய‌ர்க‌ளை எரித்து கொன்றார். மகாம‌கம் ப‌டுகொலை செய்து, ஆங்கிலேய‌ துரோகி ஜென‌ர‌ல் ட‌ய‌ரை மிஞ்சினார்....
ராஜன் - சேலம்,இந்தியா
2010-08-24 02:52:54 IST
பகுதி 2. இம்மென்றால் சிறைவாச‌ம், ஏனென்றால் வ‌ன‌வாசம் போன்ற‌ கொடும் செய‌ல் புரிந்து, ஹிட்ல‌ரின் த‌ங்கை தான் தான் என்று த‌ம்ப‌ட்ட‌ம் அடித்து கொண்டார். சாலைப‌ணியாள‌ர்க‌ளை சாக‌டித்து த‌மிழ‌ச்சிக‌ள் ப‌ல‌ரின் தாலி அறுத்தார். இர‌ண்டு ல‌ட்ச‌ம் அர‌சு ஊழிய‌ர்க‌ளை ஒரே இர‌வில் டிஸ்மிஸ் செய்து, ர‌த்த‌ வேட்கை கொண்ட‌ ராட்ச‌சி போல‌ வேட்கை த‌ணிவித்து கொண்டார். அர‌சாங்க‌ சொத்துக்க‌ளை த‌ன‌தாக்கி கொண்டார். தான் போட்ட‌ கையெழுத்தையே இல்லைஎன்று நீதிப‌தி முன்பு பொய்ச‌த்திய‌ம் செய்தார். அவ‌ர்செய்யாத‌ கொடுமைக‌ளே இல்லை. த‌மிழ‌ன் த‌லை நிமிர‌வே இல்லை அவ‌ர் ஆட்சியில். ச‌ட்டம‌ன்ற‌த்தை சாக்க‌டை ஆக்கினார். யாரும் எதிர்க்க‌ கூடாது. ஏனென்று கேள்வி கூடாது. அர‌சிய‌ல் காழ்ப்புண‌ர்ச்சி, அராஜ‌க‌ ஆட்ட‌ம், ஆண‌வ‌த்திமிர். ஆங்கிலேய‌ர் ஆட்சியில் கூட‌ அடிப்ப‌டை சுத‌ந்திர‌ம் ந‌ம‌க்கு இருந்த‌து, ஆனால் இந்த‌ அருவெருப்பு கொண்ட‌ கொடிய‌ ' க‌ன்னித்தாய்' ஆட்சியில் ம‌னித‌ர்க‌ளையே ஆட்டும‌ந்தையாய், மாட்டு க்கூட்ட‌மாய், வில‌ங்கின‌மாய் ஆக்கிய‌வ‌ர் கொடும் விஷ‌ம் கொண்ட‌ கொட‌நாட்டு கோம‌ங்கை. இப்ப‌டிப‌ட்ட‌ ச‌ரித்திர‌ புக‌ழ்கொண்ட‌வரை கொண்டாடும் சில‌ இளிச்ச‌வாய‌ர்க‌ள் இன்ன‌மும் இவ‌ருக்காக‌ குர‌ல் கொடுப்ப‌து தான் கொடுமையிலும் கொடுமை. இப்ப‌டி ப‌ட்ட‌வர் சுவாசித்த‌ காற்று ப‌ட்டாலே, க‌ருகிவிடுமே த‌மிழ‌க‌ம். நினைத்தாலே நெஞ்சு க‌னக்கிற‌தே. இவ‌ரா எதிர்க‌ட்சி த‌லைவி....
சபீர் - சிதம்பரம்,இந்தியா
2010-08-24 02:38:42 IST
சற்றும் நாகரிகம் அற்றவள் ....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-24 02:17:14 IST
அட இது மட்டும் இல்லீங்க. எதிர்கட்சி தலைவரா இருந்தும் கூட இந்தம்மா ஒண்ணுமே பண்ணலீங்க. எதிர்கட்சியா இருந்தும் கூட எவ்வளவோ நல்லதுகள மக்களுக்கு பண்ணலாம். எதிர்கட்சியா இருந்து தன்னோட கடமைய சரி வர சட்ட சபைல செஞ்சா கூட போதும். மக்களுக்கு எவளவோ நல்லதுகளை செய்ய வைக்கலாம். ஆனா இந்தம்மா அப்போவும் ஒன்னும் பண்ணல இன்னிக்கும் பண்ணாது. அதோட ஒரே குறிக்கோள் நாற்காலிதான். நம்மளோட கெரகம் புடிச்ச நேரம், இப்போ ஆட்சில உக்காந்து இருக்கிறவரு மொத்த குடும்பமா போடுற போட்டுள, இந்த மிளகா படத்தில நாலு பேர மிளகாய் தூள பைப் மேல கொட்டி அது மேல அம்மணமா உக்கார வெப்பாங்களே, அந்தளவுக்கு எரியிது. அதனால வேற வழி இல்லாம இந்தம்மாகிட்ட போக வேண்டியதா இருக்கு. எனக்கு தெரிஞ்சு இந்தம்மாவும் மாறபோறதில்ல, அவரும் மாறமாட்டாறு, நம்ம நிலைமையும் மாறாது....
மைனர் குஞ்சுமணி - குஞ்சுபட்டி,இந்தியா
2010-08-24 01:14:25 IST
என்னை கட்சியில் சேர்த்து கொண்ட எம்ஜியாரையே நான் பலமுறை புறக்கணித்துள்ள அனுபவம் இருப்பதால் இந்த திதீ யையும் பாடமே நடத்தாமல் பேராசிரியர் பட்டம் வாங்கியுள்ள அன்பழகனையும் புறக்கணிப்பது மிகவும் எளிதாக இருந்தது என்று நமது எம்ஜியார் இதழுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா கூறினார்....
rajasji - bengalore,இந்தியா
2010-08-24 01:14:25 IST
ஜனநாயகத்தின் நெறிமுறைகளை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிற....எதிர்கட்சிகளின் குரல்களை அடக்கி ஒடுக்குகிற ...தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு கட்சியின் தலைவிக்கு உரிய மரியாதை அளிக்காத கருணாநிதி ...மூன்றே நபர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கொண்ட நிலையில் இருவர் தி மு க வினர் என்பதால் ....புரட்சித் தலைவி புறக்கணித்தது மிகச் சரியானதே ! இது போன்ற ஒரு பொறுப்பான பதவிக்கு கருணாநிதி சரியான நபரை நியமிக்க மாட்டார் என்பதை உலகம் அறிந்ததே ! @ rajasji...
நாஞ்சிலான் - தம்மாம்,சவுதி அரேபியா
2010-08-24 00:48:42 IST
"பெரிய மனிதர்கள்,சின்ன புத்திகள்".இந்த அம்மையாருக்கு பிடித்துள்ள தலைக்கனமும்,ஆணவமும் என்றைக்கு ஒழிகிறதோ அன்று தான் நன்னாவாள்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக