சனி, 7 ஆகஸ்ட், 2010

தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான் எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன்

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் பீபிஆயிஷா (18), பிடிக்காத ஒருவருக்கு இவரை திருமணம் செய்து தர நிச்சயம் செய்திருந்தனர். எனவே, அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
பெண்கள் விடுதியில் கடந்த 10 மாதமாக தங்கியிருந்தார். இதை அறிந்ததலிபான் தீவிரவாதிகள் அவரை பிடித்து வந்தனர்.   பின்னர், அவரது மூக்கை அறுத்து மானபங்கம் செய்தனர். இதனால் ஆயிஷா அவமானம் அடைந்தார். வீட்டுக்குள் முடங்கிகிடந்தார்.
இதற்கிடையே, ஆங்கில பத்திரிகையில் மூக்கு அறுபட்ட நிலையிலான அவரது படம் வெளியிடப்பட்டது. மேலும், அவரது பேட்டியுடன் கூடிய கட்டுரையும் வெளியானது. இது உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மூக்கு அறுக்கப்பட்ட பீபி ஆயிஷாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதற்காக கடந்த புதன்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கும் ஏற்படக்கூடாது, என்றும், தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான் எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன் என்றார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் பீபி ஆயிஷாவின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக