சனி, 7 ஆகஸ்ட், 2010

முஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வரக் கூடாது. இஸ்லாமிய அமைப்பான ...

டெல்லி: முஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வரக் கூடாது. முஸ்லீம் மதத்தில் அது தடை செய்யப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அமைப்பான தருல் உலூம் தியோபான்ட் அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பான தடையையும் அது அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்வா உத்தரவில், பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வருவதற்கு இஸ்லாமில் இடமில்லை. எனவே முஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளில் அமரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருல் உலூமின் இந்த புதிய பத்வா சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞரும், பெண்கள் இயக்கப் பிரமுகருமான மும்தாஜ் அக்தர் கூறுகையில், கல்வி, அறிவு ஆகியவற்றை வைத்துதான் ஒருவரது தகுதியைக் கணிக்க வேண்டுமே தவிர பாலினத்தை வைத்து பார்க்கக் கூடாது.

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும், எந்த சமூகமும் எடுக்கக் கூடாது. இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு முன்பு சமூகத்தின் நலன், வளர்ச்சி குறித்து மனதில் அக்கறை இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் துயரத்தை இன்னொரு பெண்ணால்தான் சரியாக அறிய முடியும், கணிக்க முடியும். எனவே இதுபோன்ற உத்தரவுகள் நீதித்துறையில் பணியாற்றி வரும் முஸ்லீம் பெண்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும், இது சமூகத்திற்கும் நல்லதாக இருக்காது என்றார்.

பதிவு செய்தவர்: lakshmi
பதிவு செய்தது: 07 Aug 2010 6:51 pm
மூளை சிறுதும் இல்லாத துலுகனே இன்னும் எத்தனை நாளைக்கு பெண்ணகளை அடிமை படுத்துவீர்

பதிவு செய்தவர்: law
பதிவு செய்தது: 07 Aug 2010 6:45 pm
law should be equal to all religion. there is nothing like islamic law. if anyone wants to follow islamic law relocate to an islamic country. India is not an islamic country.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக