புதன், 11 ஆகஸ்ட், 2010

அகதிகள் கப்பல் குறித்து கனேடிய அரசாங்கம் கரிசனை..!

இலங்கையைச் சேர்ந்த 200 குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் கப்பல் குறித்து கனேடிய அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் கூறியுள்ளார். நேற்று டொரண்டோவில் நடைபெற்ற டொரண்டோ பொருளாதாரக் கழக வைபவமொன்றில் பேசுகையிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார். 59 மீற்றர் நீளமான இக்கப்பலை பல வாரங்களாக கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இக்கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. "இது தொடர்பான நடவடிக்கை விபரங்கள் குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் கப்பலில் யார் இருக்கிறார்கள்? ஏன் அவர்கள் கனடாவுக்கு வரக்கூடும் என்பத குறித்து நாம் கரிசனை கொண்டுள்ளோம்" என அமைச்சர் விக் டோஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக