புதன், 4 ஆகஸ்ட், 2010

ஆசியப் பிராந்தியத்தின் மிகப் பெரிய கண்தான வங்கி இலங்கையில்

ஆசியப் பிராந்தியத்தின் மிகப் பெரிய கண்தான வங்கி இலங்கையில் அமைக்கப்படவிருக்கின்றது. இந்த வங்கியை இலங்கைக்கு இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் முன்வந்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப இக்கண்தான வங்கியைத் துரிதமாக அமைப்பதற்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் இக்கண்தான வங்கியை அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் அமைச்சின் செயலாளர் டாக்டர் ரவீந்திர ரூபேரும், சிங்கப்பூர் கண்தான வங்கியின் கீழுள்ள லீ மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொனால்ட் டெங்குக்கும் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த கண்தான வங்கி தேசிய கண் ஆஸ்பத்திரியுடன் சேர்த்து அமைக்கப்படவுள்ளது.
இலங்கையில் கண்தான வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், ஒழுங்கு முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் பங்களிப்பை நூறு வீதம் பெற்றுக் கொள்வதற்கும் இந்த தேசிய கண்தான வங்கி பெரிதும் உதவுமென அமைச்சின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக