வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அரசின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த புலிகள் முயற்சித்தனர

அரசாங்கத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உளவாளியாக கருணாவைப் பயன்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கருணாவை அரசாங்கத்துடன் இணையச் செய்து அதன் மூலம் அரசாங்கத்தின் உள்விவகாரத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்ச்செல்வன் அரசியல் துறைப் பொறுப்பாளராக கடமையாற்றிய காலத்தில் முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி வகித்த காலத்தில் இரண்டு அமைச்சர்கள் கருணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணா ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்கு நாட்டம் காட்டியதாகவும், இயக்கத்தில் ஏற்பட்ட எதிர்ப்பலை இதனை மேலும் வலுப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்து வெளியிட்ட போது ஒஸ்ரின் பொ்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக