இந் நிலையில் வன்னி பகுதியில் சீனாவை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்ததாக தகவல்கள் வருகின்றன. அவர்களுடன் ராஜபக்சேவின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
வன்னி பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்த சீன அதிகாரிகள் அங்கு எந்தெந்த இடங்களில் குடியிருப்புகள் கட்டுவது என்பது பற்றி ஆய்வு நடத்தியதாகத் தெரிறது.
மேலும் இந்தப் பகுதியில் சீன ராணுவ மற்றும் உளவு கட்டமைப்புகளும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா ஆலோசனை கூற தகுதியில்லை-அமைச்சர்:
இதற்கிடையே ஆப்கானிலும் ஈரானிலும் 11 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இலங்கைக்கு ஆலோசனை கூற தகுதியில்லை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
பதிவு செய்தது: 07 Aug 2010 2:32 am
அமெரிக்கன் என்ன செய்ய முடியும்? பேசாமல் சீனாவிடம் சேர்ந்திடலாம். இல்லாவிட்டால் மகிந்த ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டான். எப்படி வசதி சீனாவா ? சிங்களமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக