வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாரதிராஜா மீது அமீர் கடும் தாக்கு

இயக்குனர்கள் சங்கத்தின் 40வது ஆண்டு விழா அறிவிப்பு பாரதிராஜமற்றும் சங்க நிர்வாகிகளால் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டது.அப்போது நிருபர் ஒருவர் சீமான் கைது குறித்து அவர்களிடம் கேட்டார். சீமான் தனது அரசியல் கட்சிக்காக பேசி சிறை சென்றிருக்கிறார். இதற்கும் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.பாரதிராஜதலைவராக இருக்கும் ஒரு சங்கத்திடமிருந்து இப்படியொரு பதில் வந்தது உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் பாரதிராஜாவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக தாக்கியிருக்கிறார் அமீர்.பிரபல அரசியல் இதழுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் நேரத்தில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என இயக்குனர்கள் மேடையில் முழங்குவதற்கு எந்த எதிர்ப்பும் தெ‌ரிவிக்காதவர், இப்போது மட்டும் சீமானின் பேச்சை கட்சி அரசியலாகப் பார்ப்பது ஏன் என்று கே‌ள்கி எழுப்பியுள்ளார்.மேலும், ஒரு வருடத்துக்கு மௌனம் காப்பதாகக் கூறிவிட்டு கருணாநிதி கலந்து கொண்ட விழாவில் அவருக்காக மௌனத்தை கலைப்பதாக பாரதிராஜ கூறியதையும் மறைமுகமாக தாக்கியுள்ளார். பாரதிராஜாவை சந்தர்ப்பவாதி என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.இறுதியாக, ஈழத் தமிழர்களுக்காக போராடும் தலைவர்களை இனியும் திரைத்துறையில் தேடாதீர்கள் என அவர் அறிவுரையும் கூறியுள்ளார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக