ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கே.பி யின் செல்வாக்கினால்; யாழ் மீனவர் சங்கத் தலைவராக புலிகளால்

கே.பி யினால் உருவாக்கப்பட்டுள்ள புனர் வாழ்வு கழக்தின் தலைவர் கே.பி யின் சகோதரனே.

சர்வதேச விதிமுறைகளை மீறி போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்காக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்குகாக சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டுவரும் கே.பி என அறியப்படும் குமரன் பத்மநாதன் இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்குகளை மீறி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த கே.பி இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் வடகிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி எனும் பெயரில் நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார். அவ்வமைப்பின் தலைவராக யாழ் மீனவர் சங்கத்தின் தலைவரான சின்னையா தவரத்தினம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கே.பி யின் ஒன்றுவிட்ட சகோதரன் என தெரியவருகின்றது. கேபி யின் தந்தையும் தவரத்தினத்தின் தந்தையும் கூடப்பிறந்த சகோதரர்களாகும்.

புலிகளின் ஆதிக்கம் குடாநாட்டில் இருந்தபோது கே.பி யின் செல்வாக்கினால்; யாழ் மீனவர் சங்கத் தலைவராக புலிகளால் நியமனம் பெற்றிருந்த இவர் , கடந்தகாலங்களில் காலங்களில் தனக்கு கே.பி யுடன் எந்த தொடர்புகளும் இருந்ததில்லை எனவும் கே.பி 2009 ம் ஆண்டு இலங்கை வந்தபின்னரே அவரை இருதடவைகள் சந்தித்துள்ளதாகவும் இந்திய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தவரத்தினம் இந்தியா வீசாவிற்காக பல முறைகள் விண்ணப்பித்திருந்தபோது அவருக்கான வீசா அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி தொடர்பாக இந்திய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தபோதே மேற்கண்ட விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடகிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தவரத்தினம் என கே.பி தெரிவித்துள்ளார். ஆனால் அத்தகவலை கே.பி யின் சகோதரன் மறுத்துள்ளதுடன் தான் அந்த அமைபில் யாழ் மீனவர்கள் சார்ந்த விடயங்களுடன் மாத்திரமே கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக