செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ராமதாஸ்,அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எங்கள் வாக்கு வங்கி சரியவில்லை. பாமகவுக்கு அடிப்படையாக இருப்பது வன்னியர்களும் வட தமிழகமும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களுக்கு பலமே வன்னியர்கள் ஆதரவுதான்.

தமிழகத்தில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிறைவேறி இருக்காது. ஆதரவு கொடுப்பதற்கு முன் ராஜ்யசபா சீட்டையும், மேலவையில் எத்தனை இடங்கள் என்பதையும் பேசி ஒப்பந்தம் போட நிர்பந்தப்படுத்தி இருந்தால் திமுக தரப்பில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்.

நாங்கள் அவர்களை நம்பினோம். திமுக நிர்வாக குழு கூடுவது வரை நூற்றுக்கு நூறு உறுதியளித்தார்கள். நிர்வாக குழு முடிவு வெளிவந்த அந்த நிமிடம் வரை அவர்களை நம்பினோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம். (அன்புமணி்க்கு ராமதாஸ் ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டார். ஆனால், 2013ம் ஆண்டு ராஜ்சபா தேர்தலில் தான் சீட் தருவோம். அதுவரை பாமக காத்திருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது)

இப்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. திமுகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஜி.கே.மணி தலைமையில் ஐவர் குழு முதல்வசர் கருணாநிதியை சந்தித்தது. அப்போது மீண்டும் பேசுவோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக இன்னும் காத்திருக்கிறேன்.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அல்லது 3வது அணி அமைவது போன்ற எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணிக்கான கதவை மூடிவிட்டதாகவும் சொல்ல முடியாது.

அரசியலில் எந்தக் கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது.

தேமுதிகவுக்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஆளும் கட்சிகளை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளை விமர்சித்தது இல்லை. விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் ராமதாஸ்.

தனித்து நின்றால் 20 கிடைக்கும்:

முன்னதாக நெல்லையில் பேசிய ராமதாஸ், திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.

தேனியில் நேற்று அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.

பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.

திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவு அளிக்கிறது.

ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:
இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.

இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.இந்தச் சூழலில் தான் இன்று பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் தான் தேமுதிக, அதிமுக என எந்தக் கூட்டணிக்கும் தயார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

உஸ்மான் அலி - Kumbakonam,இந்தியா
2010-08-11 09:24:42 IST
சூ சூ ......கண்ணை கட்டுதே. இந்த நன்னாரி பய இம்சை தாங்கலைடா சாமி. பிழைப்பு நடத்த என்ன வேண்டும் என்றாலும் செய்வான் போல இருக்கே....
ரமேஷ் - chennai,இந்தியா
2010-08-11 09:23:41 IST
நான் கூட பயந்துடன் இன்னிக்கு ராமதாஸ் காமெடி வராம போயிடுமோனு . நல்ல வேலை நன்றி தினமலர் . நல்ல சிரிங்க ஹ ஹ ஹ ஹ ஹ வை விட்டு சிரிச்ச நோய் விட்டு போகும்...
sattu - metturdam,இந்தியா
2010-08-11 09:20:55 IST
best wishes for pmk . valka pmk .valka maruthuvar iyya . valka Dr. Anbumani ramadhas . next election 40 place for pmk . valthukkal. good arasiyal ....
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-11 09:10:26 IST
தி மு க; அ தி மு க ஆகிய இரண்டு கட்சிகளும் பலமுறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து எந்த நற்பலனும் ஏற்படவில்லை என்று பெரும்பாலானவர்கள் குமுறுவது தெரிகிறது. இந்த கடிதத்தின் வாயிலாக, கருணாநிதி அவர்களையும் , ஜெயலலிதா அவர்களையும், நான் வேண்டுவது என்னவென்றால், வரப்போகும் தேர்தல்களில் நீங்கள் இருவரும் இந்த நகைச்சுவை வேந்தரை உங்களுடன் கூட்டணியில் இணைத்துக்கொள்ளாமல் இருந்தால் அதுவே நம் தமிழகம் மாபெரும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு நீங்கள் செய்த மகத்தான பணியாகும். தயவு செய்து சரி என்று சொல்லி செய்துகாட்டுங்களேன்....
Raja - hyderabad,இந்தியா
2010-08-11 09:10:12 IST
தம்பி சு ராம டாசு , சோத்துல நல்லா அயோடின் உப்பு போட்டு சாப்புடு....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-11 09:09:13 IST
நான் ஒரு வன்னியனாக இருந்து சொல்லுகிறேன், ராமதாசை எந்த கழகத்திலும் சேர்க்க கூடாது.. அய்யா ராமதாஸ் அவர்களே, ஏன் வன்னிய மக்களின் பெயரை கெடுகிரீர்கள்? நாங்கள் என்ன பாவம் செய்தோம் உங்களுக்கு? உங்களால் எங்கள் பெயர் மிகவும் கெட்டுவிட்டது. இங்கு இத்தாலி தமிழர்கள், அட லூசு ராமாதாஸ் ஜாதியா நீ என்று ஜாதியை வைத்து என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உதவி செய்யலனாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாதீர்கள். எங்களை வாழவைக்கிறேன் என்று சாகடிக்காதீர்கள்... தயவு செய்து மஞ்சள் தாத்தாவின் கூட்டணியில் சேர்ந்துவிடுங்கள், எங்கள் புரட்சி தலைவி அம்மாவின் பார்வையிலிருந்து காணமல் சென்றுவிடுங்கள். எங்கள் அம்மாவின் வெற்றியை கெடுத்துவிடாதீர்கள், உங்களுக்கு கோடி புண்ணியம். இப்போ எங்கள் அம்மாவின் கட்சி மெகா கூட்டணி பலம் பெற்று வீறு நடை போட்டுவருகிறது, அதிலும் நுழைந்து கும்மி அடித்துவிடாதீர்.. எங்களை நீங்கள் (சனி) பிடிப்பதை விட மஞ்சள் துண்டை பிடித்துகொள்ளுங்கள் அவர் தான் கூட்டணி இல்லாமல் வரும் தேர்தலில் கஷ்டபடுவார்....
கார்தீசன் - jeddah,சவுதி அரேபியா
2010-08-11 09:07:30 IST
ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைத்தால் உன் குடும்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த பொறம்போக்குகளையும் நடுரோட்டில் நிற்க வைத்து சுட்டுகொள்ளவேண்டும்.எருமைக்கு கூட சொரணை இருக்கும், உனக்கும் உன்னை சேர்ந்தவர்களுக்கும் அது கூட இருக்காதா? உன்னையெல்லாம் பெத்தாங்களா? அல்லது செஞ்சாங்களா?...
Chidambaram - Chennai,இந்தியா
2010-08-11 09:04:21 IST
மரத்தை வெட்டி வீதியில் போட்டு அராஜகம் செய்தார்கள்-கட்சி மாறி கட்சி மாறி சம்பாத்தியம் செய்தார்கள். இப்போது பசுமை புரட்சி என்கிறார்கள்-ஜனநாயக கட்சி என்கிறார்கள். மக்களும் சரி மற்ற அரசியல் கட்சிகளும் சரி இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்....
இளம்பிறையான் - chennai,இந்தியா
2010-08-11 08:43:23 IST
இரவு பிச்சைகாரனுக்கு எந்த வீட்டு சோறு கிடைத்தாலும் அது போதும் இன்றைக்கு என்று நினைப்பான்.அது போலத்தான் இதுவும்.பாவம் விட்டுவிடுங்கள் இவரை....
மதன் - chennai,இந்தியா
2010-08-11 08:39:00 IST
இதெல்லாம் ஒரு பொலப்பா...
visa - COS,யூ.எஸ்.ஏ
2010-08-11 08:35:30 IST
வன்னிய நண்பர்களே..உங்களின் உண்மையான எதிரியை, தமிழகத்தை கூறுபோடும் திருடர்களை இனம்கண்டு கொள்ளுங்கள்.....
sankaran - Chennai,இந்தியா
2010-08-11 08:34:57 IST
இவருக்கு அரசியலிலிருந்து நிரந்தர ஒய்வு கொடுக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது....
Vinojj - Woodlands,சிங்கப்பூர்
2010-08-11 08:29:47 IST
தம்பி நீ இதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டே! போயி மறுபடியும் லாட்ஜ -ல ரூம் போட்டு லேகியம் விக்கிற வேலைய பாரு....
அபு - cuddalore,இந்தியா
2010-08-11 08:25:46 IST
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்ற ஒரு வாசகத்தை வைத்து கொள்கைகள் ஏதுமில்லாமல் கூட்டணியை தேர்தல் நேரத்தில் மாற்றிகொண்டே இருக்கும்ராமதாஸ் போன்றவர்களை அரசியலில் இருந்தே ஓரம் கட்ட வேண்டும்...
இராமச்சந்திரன் - VirginiaUSA,யூ.எஸ்.ஏ
2010-08-11 08:19:14 IST
தமிழகத்தின் விடிவு பா.ம.க வை தனித்து விடுவதில் இருந்து ஆரம்பமாகட்டும். கடவுளே கருணை காட்டுவாயா ?...
sathish - cbe,இந்தியா
2010-08-11 08:11:16 IST
மதில் மேல் பூனையாய் இருக்கும் கேவலம் ஒரு தலைவர்,, அதற்க்கு பின்னால் தொண்டர்கள் இப்படி ஒரு கட்சி இருப்பது தமிழ் நாட்டிற்கே கேவலம்...
அந்நியன் - Chennai,இந்தியா
2010-08-11 08:05:36 IST
அரசியலில் உனக்கு சூடு, சொரணை, வெட்கம், மானம் எதுவே கிடையாது. ஆனால் பொதுமக்களிடம் சாதி பெயரால் ரெளடியிசம் செய்யுறத மட்டும் நீ நிறுத்தப்போறது இல்லை. கணேஷ் சொன்னது போல மக்கள் தான் உனக்கு நிரந்தர எதிரி. திண்டிவனம், கள்ளக்குறிச்சி இந்த மாதிரி ஏரியாவுல சக தமிழனையே மிரட்டி, அடாவடித்தனம் பண்ணி கொள்ளை அடிக்கிற தொழிலை எப்ப விடப்போறீயோ தெரியலை....
சச்சின் - tirupur,இந்தியா
2010-08-11 08:02:08 IST
சரியான காமெடி பீஸ் நீ உன்னைய நினச்சாலே எனக்கு வெட்க்கம இருக்கு நீ சாப்பாட்டுல உப்பு போட்டு தான் சாப்பிடுறிய ன்னு எங்களுக்கு எல்லாம் சந்தேகமா இருக்கு உன்னைய ஊருக்குள்ள மதிக்குரன்களா உனக்கு கரி துப்பின உன் முகத்துல உனக்கு எல்லாம் ரோசம் வருமா உனக்கு எல்லாம் எதுக்குடா கட்சி மூடிகிட்டு கிளம்புற வழிய பரு இனிமேல் உனக்கு எந்த மக்களும் வோடே போடா மட்டங்க அதுனால உன்னுடைய கட்சி எலேச்டின் ல பங்குஎர்கதுன்னு சொல்லிடு புரியுதா...
பஹ்ரைன் தமிழன் - Manama,பஹ்ரைன்
2010-08-11 07:53:31 IST
ராமதாசு போட்டோவுல போஸ் கொடுப்பதை பார்த்தா இந்த எலெஷனுக்கு பிறகு அரசியல் வேண்டாம் , பழைய பாட்டில் விக்கப்போறேன் என்று சொல்வது போல இருக்கு....
கோபி - chennai,இந்தியா
2010-08-11 07:32:50 IST
தலிவா நீ கலக்கு நம்ம ஜாதிக்கு நீ தான் கடவுள்...
vivek - Singapore,இந்தியா
2010-08-11 07:30:51 IST
First you guys stop this statement...by saying your cheating people and cheating yourself...people should think of this before they vote......
தஞ்சை.மனம் - Erode,இந்தியா
2010-08-11 07:27:08 IST
நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியா? கேக்கிரதுக்கே ஒரே சிரிப்பா இருக்கு....
hariharan - BintuluMalaysia,இந்தியா
2010-08-11 07:27:06 IST
தினமும் உங்க ரெண்டு பேரோட தொல்லை ஜாஸ்தி ஆயிட்டே போகுது....
எஸ்.வெள்ளைசாமிMA - manaparai,இந்தியா
2010-08-11 07:24:29 IST
ராமதாஸ் மருத்துவஸெவை செய்து இருந்தால் செலபேர் தான் செத்து இருப்பர் இப்போது ஒரு சமுதாயத்தை சாக அடிக்கிறார் இவருக்கு ஒருநிரந்தர கொள்கை இல்லை நாட்டின் மிக பெரிய வருவாய் டாஸ்மார்க்கு இதை யாராலும் ஒழிக்க முடியாது எஸ்.வெள்ளைசாமிMA...
அர்ச்சுனன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-11 07:20:16 IST
ஜோகர்ஷ் எப்ப வேண்டுமென்றாலும் எதவேணும்னாலும் வாய்கூசாமல் பேச முடியும் என்பதற்கு நம்ம ராம-தமாஷ் அய்யா தான் சரியான உதாராணம். ஏதாவது அரசியல் கலப்பட-மருத்துவர் அப்படி இப்படின்னு சொல்லி உள்ளே தள்ள திமுகாவிற்கு ஒரு வழிகூட கிடையாதாபா?...
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-11 07:15:47 IST
நிரந்தர கொள்கையே இல்லை. பின்னே நண்பர்களாவது. பகைவர்களாவது?வெறும் MBBS படிச்ச நீங்க எப்படி கோடீஸ்வரனானீங்க? MD , MS படிச்சவனெல்லாம் ஜிங்கியடிக்கிறான்!! டிஹுதான் நட்பின் பலனா?...
த வினோத் - Hyderabad,இந்தியா
2010-08-11 07:15:33 IST
அரசியலில் நட்பும் இல்லை, பகையும் இல்லை! சூடும் இல்லை, சொரணையும் இல்லை! பேரம்...! பேரம் மட்டும் தான்உண்டு. துண்டை போர்த்தி, விரலை பிடித்து விலை பேசுவார்கள். பேரம் படிந்தால் வியாபாரம். ஒட்டு போடுவது எதற்காக என்று மக்கள் உணராதவரையிலும் இப்படி பல பேரங்கள் நடக்கத்தான் செய்யும்....
k.kaipulla - nj,இந்தியா
2010-08-11 07:14:31 IST
நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்கன்னு தெரியாம இவனுக மண்டைய பிச்சுக்கணும். நல்லது செஞ்சா மட்டும்தான் ஓட்டு கிடைக்கும். தாவி தாவி கூட்டணி வெச்சா ஓட்டு கிடைக்காதுன்னு புரிய வைங்க மக்களே. உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன். நீங்க பாதி பேரு பண்ணுற தப்புனால நாம எல்லோருமே பாதிக்கபடுகிறோம். குருட்டு தனமா ஜாதிக்காக வேண்டியோ, அல்லது கட்சியின் அடிமை என்பதற்காகவோ, அல்லது கட்சியின் சப்போர்ட்டர் என்பதற்காகவோ ஒரு கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள். அவனுக மாறினா நம்ம பவர் என்னனு காமிங்க. எனக்குன்னு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நினைக்காத அளவுக்கு மாற்றி ஓட்டு போடுங்க. ஓட்டு வங்கி இருக்கிற வரைக்கும் இவனுக இப்படியே தான் ஏமாத்துவாணுக. அப்போதான் இவனுக நமக்காக உழைப்பானுக. இல்லேனா இப்படிதான் மக்களே. நம்ம ஓட்டுக்களை வாங்கிட்டு அவனோட புள்ளகுட்டிங்க நல்லா இருக்க என்ன வேணுமோ அதை செஞ்சுட்டு போயிட்டே இருப்பானுக. நீயும் நானும் கோவணத்த கட்டிக்கிட்டு திரிய வேண்டியதுதான். இந்த முறை மட்டும் இவன் மறுபடி தாவினான், சுத்தமா ஒரு ஓட்டு கூட போடாதீங்க. அவனுக்கு நீங்க யாருன்னு புரிய வைங்க. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு மக்களே.......
JOHN - tirunelveli,இந்தியா
2010-08-11 07:10:56 IST
"த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு "...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக