திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஒரு பைசா கூட செலவு செய்யாமல் வாழும் அதிசய மனிதர்




இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் 31வயது இளைஞர் மார்க் பாயல்,   கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணத்தை பயன்படுத்துவதை கைவிட்டு விட்டார். 
இவர் பிரிஸ்டல் நகரில் ஒரு பண்ணையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு கேரவானில் வசித்து வருகிறார்.

அவர் தன் உணவுக்கு தேவையான பயிர், காய்கறி ஆகியவற்றை அவரே வளர்த்துக்கொள்கிறார். அவர் விறகு அடுப்பு வைத்து இருக்கிறார். சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்.
அவர் மொபைல்போன் வைத்திருக்கிறார். அந்த போனில் இன்கமிங் கால்கள் மட்டும் வரும். சூரிய சக்தியால் இயங்கும் லேப்டாப் வைத்து இருக்கிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக சைவ உணவை மட்டும் சாப்பிட்டு வருகிறார்.
சுதந்திர பொருளாதார இயக்கத்தை இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இதில் 17 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இது பற்றி மார்க் பாயல்,  ‘’நான் என் படகு வீட்டை விற்றேன். என் வேலையையும் விட்டு விட்டேன். எதை எல்லாம் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை பட்டியல் போட்டேன். இதற்கு மாற்று வழி என்ன என்பதையும் யோசித்தேன். பற்பசைக்கு பதிலாக மீன் எலும்புகளை பொடி செய்து அதை பயன்படுத்துகிறேன்.
நான் சைவமாக இருப்பதை அறிந்து என்னுடன் பழகிய பல பெண்கள் என்னை விட்டு பிரிந்துபோய் விட்டனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என் புத்தகத்தை படித்த என் இணையதளத்தை பார்த்த சில பெண்கள் என்னிடம் விருப்பம் கொண்டுள்ளனர்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக