வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

Black Berry பிளக்பெரி’சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ‘பிளெக்பெரி’ கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் சர்ச்சை : பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை!

இந்தியாவில் ‘பிளக்பெரி’ கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் தற்பொழுது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ‘பிளக்பெரி’ கையடக்கத் தொலைபேசிகளின் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இந்திய மத்திய உள்துறை அமைச்சருக்கும் உயர்மட்ட அதிகாரிக்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

‘பிளக்பெரி’ கையடக்கத் தொலைபேசியில் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் போது அவை பரிமாணம் மாற்றப்பட்டதாகத் தென்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் ‘பிளக்பெரி’ தொலைபேசிக்கு ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் பல்வேறு வகையான பாதுகாப்பு வழிமுறைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக