சனி, 28 ஆகஸ்ட், 2010

Air port visa no more? வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்
இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கி வீசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இருக்காது எனக் குறிப்பிடப்படுகிறது. சகல நாடுகளுக்குமான ஒன் எரைவல் வீசாக்களை ரத்து செய்வதென இலங்கை அரசாங்கசம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் இலங்கைக்கு வந்து இறங்கியதன் பின்னர் (ஒன் எரைவல்) வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இந்த புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்ல வீசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகத்தில் வீசா விண்ணப்பித்து அதன் பின்னரே இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும். எனினும், இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் வீசா வழங்கும் நாடுகளினது பிரஜைகளுக்கு இலங்கை ஒன் எரைவல் வீசா வழங்கத் தயார் என அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த வேறு நாடுகளில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் வீசா வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக