வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

பிச்சைக்காரர்கள் பரிதாப பலி 900 பேர் தங்கவைக்கப்படும் இடத்தில் 2500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூர்: மேலும் 8 பிச்சைக்காரர்கள் பரிதாப பலி

பெங்களூர் சுமஹள்ளி என்ற இடத்துக்கு அருகே பிச்சை எடுப்போர் மறுவாழ்வு மையம் உள்ளது. நகரில் பிடிபட்ட பிச்சைக்காரர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். 900 பேர் தங்கவைக்கப்படும் இடத்தில் 2500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை 12 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

இவர்களில் 11 பேரின் உடல் நேற்று மாலையே அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது.
 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் படவில்லை. எல்லோரும் இயற்கையான முறையில் இறந்ததாக மறுவாழ்வு மைய ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க வாந்தி, பேதி காரணமாக 14 பேர், இந்திராநகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 15 பேர் மறுவாழ்வு மையத்திலேயே சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனால் உணவு விஷமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் சுதாகர் ராவ், இச்சம்பவம் குறித்து சமூக நலத்துறை ஆணையர் விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மேலும் 8 பேர் இறந்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக