வடக்கு கிழக்கில் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்பு!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என மகளிர் விவகார சிறுவர் பராமரிப்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“யுத்தத்தின் போது விதவைகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுயதொழிலை மேற்கொள்ளும் வகையில் பல திட்டங்களை அமைச்சு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வடமாகாணத்தில் 40 ஆயிரம் பேரும் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பேரும் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களது நலன் கருதி சுயதொழில் முயற்சிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக இந்தியாவின் உதவியுடன் 800 விதவைகளுக்கான சுயதொழில் முயற்;சிக்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக