723 புலி உறுப்பினர்கள் உட்பட 1562 பேர் ஒரு மாதத்தில் கைது. பிரதமர் ஜயரட்ண
இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 1562 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு அறிவித்தார்.இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து கைது செய்யப்பட்ட 723 விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட 765 பேரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 74 பேரும் இதில் அடங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கைதில் இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள மக்களிடம் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் இருந்தும் கிடைத்த தகவல்களுக்கு அமைய நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமான ஆயுதங்களும் நாசகார உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.அதேபோல் கிடைக்கும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலி உறுப்பினர்களையும் இனங்கண்டு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் வீடுகள், காணிகள், பல்வேறு வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமுள்ள சொத்துகளை அரச உடைமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக