சனி, 7 ஆகஸ்ட், 2010

யாழ். குடாநாட்டில் 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வர்த்தக நுகர்வோர்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பணிப்பையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களை சுற்றிவளைத்து சோதனையிட்டது. கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தல் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் பொருட்களில் குறிப்பிடப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

சம்பா அரிசியை 90 ரூபாவுக்கு மேல் விற்ற அதிகளவு வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். பக்கற் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக