சேலம் முன்னாள் இன்ஸ் பெக்டர் குப்புராஜ் கொலை குறித்து அவரது உறவினர்கள் கூறிய தாவது:-
குப்புராஜூக்கு ராமலிங்கம், ரத்தினம், சிவகுரு என்ற மகன்கள் உள்ளனர். இவர்களில் ராமலிங்கம் இறந்து விட்டார்.
இதனால் குப்புராஜ், ராமலிங்கத்தின் மகன் கார்த்திக்கின் (வயது 14) பெயரில் 3 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தார். இதுபோல் மற்றொரு மகன் ரத்தினத்திற்கு 3 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தார்.
சேலம் தாதகாப்பட்டி, தாச நாய்க்கன்பட்டி உள்பட பல இடங்களில் குப்புராஜூக்கு 7 வீடுகள் இருக்கிறது . இந்த வீடுகளை சிவகுருவிற்கு எழுதி வைத்து இருந்தார். தான் இறந்த பின்னர் நிலம், வீடுகளை மகன்கள் எடுத்து கொள்ளவேண்டும் என பத்திரத்தில் எழுதி வைத்து இருந்தார்.
ஆனால் சிவகுருதனக்கு வீடுகள் வேண்டாம். நிலம் தான் வேண்டும் என கூறிதினமும் தகராறு செய்து பெற்றோரை மிரட்டி வந்தார். கடந்த 2 வருடங்களாக மல்லூர் போலீஸ் நிலையத்தில் சிவகுருவும், குப்புராஜூம் மாறி மாறி புகார் கொடுத்து வந்தனர்.
இதன் பேரில் தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்தனர். நிலப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் மல்லூர் போலீசார் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் குப்புராஜ் அவரது குடும்பத்துடன் கோரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொலை செய்து சரண் அடைந்த சிவகுருவிற்கு விஜயலட்சுமி சிறு நீரகத்தை வழங்கி பிழைக்க வைத்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது:-
சிறுநீரகம் செயல்இழந்து இருந்த சிவகுருவை அவரது தந்தை குப்புராஜ்தான் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தார். பின்னர் சிவகுருவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ரூ.13லட்சம் வரை செலவு செய்து உயிரை காப்பாற்றினார். இதனால் தான் சிவகுருவிற்கு நிலம் தரவில்லை. வீடுகளை கொடுத்து இருந்தார். பல லட்சம் செலவு செய்து தன் உயிரை காப்பாற்றிய தந்தையையே சிவகுரு கொன்றதை நினைத்தால் வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக