கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் ராஜீ. மீனவர். இவருடைய மகள் ராதிகா (வயது 6). கடந்த மே மாதம் ராதிகா ஒரு விபத்தில் கோமா நிலையில் விழுந்தார். அவரை ஆலப்புழை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். ஒரு மாதத்துக்கு மேலாக சிகிச்சை அளித்தும் கோமா நிலையில் இருந்து மீள வில்லை.
எனவே அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் கிரிஜா இசை தெரபி என்னும் மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். ராதிகாவுக்கு தினமும் பிடித்தமான பாடலை “ஹெட்போன்” மூலம் ஒலிக்க செய்தார். கர்நாடக இசையும் அமைந்த மெலோடி சினிமா பாடல்கள் ராதிகாவுக்கு மிகவும் பிடித்த “கிருஷ்ணா” என்ற பாடல் ஆகியவற்றை அடிக்கடி காதில் கேட்க செய்தனர்.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இப்போது ராதிகாவுக்கு நினைவு திரும்பி இருக்கிறது. உயிர் பிழைப்பாரா? என்ற கேள்விக்குறியில் இருந்த அவர் இப்போது நல்ல நிலையில் தேறி இருக்கிறார். இது குறித்து டாக்டர் கிரிஜா கூறியதாவது:-
ராதிகாவுக்கு பல்வேறு சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே மாற்று சிகிச்சை செய்து முயற்சித்தேன். இதற்காக “இன்டர்நெட்டில்” தகவல்களை சேகரித்தேன்.
அப்போது கோமா நிலையில் இருப்பவர்களுக்கு “இசை தெரபி” சிகிச்சை அளித்தால் நரம்பு மண்டலங்கள் சீராகி நினைவு திரும்பும் என்று தகவல் இருந்தது. எனவே பிடித்தமான இசையை தொடர்ந்து கேட்க செய்தோம். இதில் மூளை நரம்பு சரியாகி கோமா நிலை நிவர்த்தி ஆகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக