பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 1,350பேருக்கு எதிராக வழக்கு தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு வழக்கு தொடர்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 650பேர் வவுனியா தடுப்பு முகாமிலும் ஏனைய 700பேரும் காலி, பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
www.tamil.daillymirror.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக