திங்கள், 26 ஜூலை, 2010

நாடகத்துக்கு திரும்பினார் திலகன், மம்மூட்டி, மோகன்லால்பின்னணி


சமீபத்தில் மலையாள இயக்குனர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் இரு அணிகள¢ பிரிந்தன. குறிப்பிட்ட சங்கத்தில் இயங்கும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கக்கூடாது என்று நடிகர்களுக்கு அங்குள்ள நடிகர் சங்கம் தடை விதித்தது. அதை நடிகர் திலகன் மீறியதுடன் மம்மூட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மோகன்லால் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நடித்து வந்த அனைத்து படங்களிலிருந்தும் நீக்கப்பட்டார். வேறு புதிய பட வாய்ப்புகளும் வரவில்லை.

தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் திலகன், இங்கு ஒரு சில நடிகர்களிடம் தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டார். அதற்கும் பலன் இல்லை.
நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் திலகன். தற்போது திரையுலகம் கைவிட்டதால் 25 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நாடக துறைக்கே திரும்பி விட்டார். அவரது நெருங்கிய நண்பர்கள் வினயன் மற்றும் மணிலால் நடத்தும் அக்ஷராஜ்வாலா என்ற நாடக குழு மூலமாக திலகன் களம் இறங்கி இருக்கிறார். கேரளாவில் நடக்கும் தற்போதைய அரசியல் நிலவரத்தை மையமாக வைத்து தயாராகியுள்ள நாடகத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார். இந்த நாடகத்தின் தொடக்க விழாவை தடபுடலாக நடத்த திட்டமிட்டுள்ளாராம் திலகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக