பல்வேறு நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், அக்டோபரில் டில்லியில் துவங்க உள்ளது. இப்போட்டிக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டியை யொட்டி, டில்லியில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் நடக்கின்றன.இந்நிலையில், முன்னாள் மத்திய விளையாட்டு அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மணிசங்கர் அய்யர், நேற்று பார்லிமென்ட் வெளியே, செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவதுமழைக்காலம் துவங்க உள்ள நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவங்க உள்ளன. மழை நீடித்து, போட்டிகள் நடப்பதில் இடையூறு ஏற்பட்டால், நான் மகிழ்ச்சி அடைவேன்.இப்போட்டிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, இத்தொகையை குழந்தைகள் நல மேம்பாட்டிற்கு ஒதுக்கலாம். சர்க்கஸ் போன்று நடத்தப்படும் இந்த விளையாட்டிற்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவழிப்பதற்கு பதில், குழந்தைகள் விளையாடுவதற்கு அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்தால், பிற்காலத்தில் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு மணி சங்கர் அய்யர் கூறினார்.
டில்லியில், ஆளும் காங்கிரஸ் அரசு, இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் இவ்வாறு பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., சந்தீப் தீட்சித், மணி சங்கரின் கருத்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறியதாவது:காமன்வெல்த் போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மணி சங்கர் அய்யர் இவ்வாறு பேசியிருப்பது ஏற்கக் கூடியதல்ல. அவர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தால், தற்போது கட்டப்பட்டுள்ள விளையாட்டு ஸ்டேடியங்கள் எல்லாம் கட்டப்பட்டிருக்காது.ஒரு மூத்த தலைவரின் வாயிலிருந்து இத்தகைய நகைச்சுவையான பேச்சை எதிர்பார்க்கவில்லை. காமன்வெல்த் போட்டிகளை எந்த ஒரு தனிநபராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அவரது பேச்சை இந்தியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். ராஜ்யசபா எம்.பி., ஒருவர், தான் பேசும் பேச்சுக்களை சிந்தித்து பேசவேண்டும்.இவ்வாறு சுரேஷ் கல்மாடி கூறினார்.
ஒட்டு போட்ட ஏமாளி - Pudukkottai,இந்தியா
2010-07-28 07:50:34 IST
இந்த நல்ல யோசனையை செம்மொழி மாநாட்டிற்கு முன்னால் சொல்லி இருந்தால் இருந்தால் பாராட்டி இருக்கலாம் 65 % அரசு பள்ளிகள் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கிறது, ஒரு பள்ளிக்கு 2 கோடி ஒதுக்கி இருந்தால் கூட 650 கோடிக்கு கணக்கு போட்டு பாருங்கள்..... எத்தனை பள்ளிகள் நன்மை அடைந்திருக்கும்... ஊழலிலும் லஞ்சத்திலும் மூழ்கி போய்கொண்டிருக்கும் என் நாட்டிற்கு ஒரு விளையாட்டு போட்டி நடத்தி அதிலாவது நல்ல பெயர் எடுக்கலாம் என்றில்லாமல் வந்துட்டாரு பேச.. போங்க சார் போயி மயிலாடுதுறைய சிங்கபூரா மாத்துர வேலைய பாருங்க.... உங்கள் மேல் நாங்கள் வைத்திருந்த மரியாதையை உங்கள் நாக்கால் கெடுத்து கொள்ளாதீர்கள்,, ப்ளீஸ்.......
ச.Chandrasekaran - Salem,இந்தியா
2010-07-28 07:22:30 IST
அவர் சொன்னது மிகவும் சரி. சாப்பாடுக்கே வழியில்லை இதுல என்னா வறட்டு கெளரவம்?...
ராசா - Blore,இந்தியா
2010-07-28 07:19:13 IST
non-sense guy, What you did in your previous tenure when u were a sports minister. You should have built one stadium for each district in the funds that you are allocating to the country. Then it should have been a benefit for all kids in the country. Here is an idea 1) please organize sports tournaments in all cities like IPL for all the games, 2) Ask private companies to sponsor and they will be ready to do that as they get advertisement for this, 3) Have the matches live-cast in the local TV I request everyone who reads this comment to think on this angle, who ever gets chance to do like this please do it or encourage others to do like this. This will be a profitable business as well whoever is organizing....
சஞ்சீவ் - bangalore,இந்தியா
2010-07-28 07:12:36 IST
ஐயர் கூறியதில் தவறில்லை. "இத்தொகையை குழந்தைகள் நல மேம்பாட்டிற்கு ஒதுக்கலாம்." சீரிய கருத்து...
V.Subbarao - Singapore,இந்தியா
2010-07-28 06:45:15 IST
திரு மனிசங்கரஐயர் பேச்சு, இந்த காலகட்டத்தில் போருத்தமில்லா விட்டாலும், எளியமக்கள் அவசியம் பாராட்டப்படவேண்டிய செய்தியாகும். எல்லா சிறு மற்றும் பெருநகரங்களில் எளியோர், அரசுப்பள்ளிகள், சிருபள்ளிகள் ஆகியன விளையாட எந்தவிதமான வசதிகளுமில்லை. அரசின் வசம் இருந்த சில மைதானங்களும் ஆக்கிரமிப்பில் போய்விட்டன: மற்ற சிறு பள்ளிகளின் இடங்களின் நிலையும், அரசின் புரம்போக்கின் நிலையும் தனியாக சொல்லவேண்டிய அவசியமில்லை. இதை பற்றிசிரிடும் கவலைபடா மத்ய விள்ளயட்டுக்குழு , பெயருக்காகவும், கமிச னுக்காகவும் இதுபோன்ற பேரிய விழாக்களை காட்சிப்பொருளாக நடத்துகிறது. ஐயருக்கு பதிலளித்த திரு கல்மாடி பல்லாண்டு முறையற்ற வழியில் தொடர்து தற்போதைய பதவியில் இருந்தும். மத்ய அரசின் விள்ளயாட்டுத்துரையின் அமைச்சராய் மீறியும் பேசியும் , செயல்புரிந்தும் வருகிரார். இது அவரின் சொந்த பணத்திலா ?. சட்டதிட்டங்கலைமீரி தவராக அனுபவிக்கும் அதிகரத்தினால் உள்ளது அவரின் இந்த பேச்சு. அரசு முதலில் எல்லாமக்களுக்கும் விலையாட்டு வசதியினை தரவாவது இனி அவர் முயலட்டும்....
முனைவர்.இரா.பெ. சீமா - பாலி,இந்தோனேசியா
2010-07-28 06:39:04 IST
இந்த 'மாமேதை' இவ்வாறு முன்மொழிவது, சுரேஷ் கல்மாடிக்கும் இவருக்கும் ஆகாது என்பதை வெளிச்சம் போடுவதாகவே தோன்றுகிறது. ஒரு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் இப்படி 'விளையாட்டாக' பேசுவது நல்லதல்ல. ஓ.எஸ். மணியனிடம் தோற்று, மூலையில் முடங்கியிருந்தவரை சமீபத்தில்தான் ராஜ்யசபைக்கு எம்.பி. ஆக்கியது காங்கிரஸ். ஒருவேளை, அமைச்சர் பதவியை எதிர்பார்த்து, கிடைக்காத விரக்தியோ என்னவோ?...
நிருபமா கிருஷ்ணன் - Chennai,இந்தியா
2010-07-28 06:29:38 IST
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. மணி சங்கர் ஏற்புடையது அல்ல. இவர் சிறந்த அறிவாளி மற்றும் நிர்வாகி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. காலம் கடந்து கடைசி தருணத்தில் இதை ஏன் கிளப்புகிறார்? மானியம், கடன் தள்ளுபடி என்ற பல வகைகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் வீணடிக்கப்படுகின்றனவே! திரு. மணி சங்கர் இது பற்றி போராடலாம்....
paddyfather - chennai,இந்தியா
2010-07-28 06:24:03 IST
முப்பத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் ஒரு சர்வ தேச விளையாட்டு போட்டி நடத்தவில்லை எனில் எவரும் வருத்த பட மாட்டார்கள். சில நாடுகள் நம்மை சில நேரம் தாழ்வாக எடை போட்டாலும் போடலாம். ஆனால் நமது ஜனத்தொகையில் நாற்பத்தைந்து சத விஹிதம் மேலாக, ஒரு வேளை கஞ்சிக்கு கூட வழியில்லாமால் கஷ்டப்பட்டால் அது ஒரு வேதனைக்குரிய விஷயம். இது சர்க்காரால் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.. சர்க்கார் சிந்திக்குமா...
விவசாயி muthukarthi007@gmail.com - sathyamangalam,இந்தியா
2010-07-28 05:47:57 IST
இவர் சொல்வது நியாயம் தானே, 35 ஆயிரம் கோடி ரூபாயை விவசாய பணிகளுக்கு கூடுதலாக செலவு செய்திருந்தால் விலைவாசியாவது குறைந்து இருக்கும்......
செந்தில் - chennai,இந்தியா
2010-07-28 05:45:01 IST
நீங்கள் தோற்றது எவ்வளவு நல்லதாக போச்சு. இல்லீனா பிரதமர் கிட்ட இந்த அபூர்வ யோசனையா மந்திரி தந்திரி கூட்டத்தில சொல்லி உலை வெச்சு இருப்பீங்க .....................
குமார் - NJ,உஸ்பெகிஸ்தான்
2010-07-28 03:08:18 IST
ஏன் எல்லா விளையாட்டு போட்டிகளும் டெல்லியில் நடைபெறுகிறது இந்தியாவில் வேறு இடமே இல்லையா..!...
RAJ - ChennaiGoaLondon,இந்தியா
2010-07-28 02:18:21 IST
I am neither suprised nor shocked by the comments made by the former central minister a stupid and a self centred man. I met him in 1991 at the leela beach goa a resort in Goa.He was staying with his family all at free of cost -a typical minister i suppose. Unless you host this game you cannot become a good participant.;for godsake it is only a commonwealth games not a olympics. Inspiration is possible for an aspirant sportsperson is to witness the performance of the leading sports personalities around the world at our doorstep. It is not easy for an ordinary indian to travel abroad to witness any games for a source of inspiration. Aiyer the twat wants the funds to be spent on young people which never reaches and it ends up in his a pocket.what a foolish comments from an irresponsible politician who happens to be from tamil nadu-a good for nothing Wanker !!!!!!!!!!!!!!...
ரமேஷ் rayen - AbuDhabi,யூ.எஸ்.ஏ
2010-07-28 01:41:56 IST
at this moment if Common wealth Games stops, what would happen to that millions of rupees spent? Mr Mani shankar has to think before speaking it out.............may be he is angry that he is no more sports minister...
ம.ராஜா குவைத் பார்வனிய - kuwait,இந்தியா
2010-07-28 01:40:11 IST
தனது மயிலாடும்துரை தொகுதியை சிங்கபூர் போல மாற்றுவான் என கூறி வெற்றிப்பட்ட பின் எதுவும் உருப்படியாக செய்யாத மணி தற்போது சின்னபுள்ளதனமாக பேசுவது சரியல்ல சாரி மணி u r வெரி....................?...
பாலா - Chennai,இந்தியா
2010-07-28 00:43:35 IST
இவரையெல்லாம் என்ன பண்றது? 600 கோடி செலவில் செம்மொழி மாநாடு நடத்தி என்ன பயன்? இவரு ஊர்ல நடக்கிற அநியாயத்தை கண்டும் காணாம போயிருவாரு..தி.மு.க ஜால்ரா.... விளையாட்டு போட்டி நடத்தறதுக்கு இவருக்கு வலிக்குதாம்.... பல லட்சம் கோடி ஊழல் செய்த இவர் கூட்டணி கட்சி காரங்களுக்கு ஜால்ரா போட மட்டும் தெரியும்.. போங்க சார்... போயி உங்க ஜால்ரா வேலைய மட்டும் கவனிங்க.......
எ அயப்பன் - delhi,இந்தியா
2010-07-28 00:26:57 IST
பக்குவம் இல்லாத பேச்சு.வெட்கப்படவேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக