புதன், 14 ஜூலை, 2010

இலங்கையர் மூவருக்கு டோகா நீதிமன்றம் சிறைத் தண்டனை

கட்டாரில் வங்கி அட்டை மூலம் பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்த இலங்கையர் மூவருக்கு டோகா நீதிமன்றம் தலா ஓராண்டு கால சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. வங்கிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்தவர் ஒருவரே இம்மோசடி நடவடிக்கையைத் திட்டமிட்டு முன்னெடுத்துவந்துள்ளமை நிருபனமாகியுள்ளது.

ஏனைய இருவரும் இவரின் மோசடி நடவடிக்கைக்கு உதவி , ஒத்தாசை வழங்கி வழங்கி இருக்கின்றார்கள். இம்மோசடி நடவடிக்கை கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 437,000 கட்டார் றியால் வரை மோசடி செய்திருக்கின்றார்கள். அதில் 415,300 றியால் வரை மோசடி செய்தவர்களிடம் இருந்து மீட்கப்டட்டிருக்கின்றன. ஒரு றியாலின் பெறுமதி சுமார் 30 ரூபாய் என்பது குறிப்ப்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக