தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்று திரையுலகில் சிலர் கூறிவருகின்றனர். அப்படி தடுப்பது தவறு என இன்னொரு தரப்பு கூறுகிறது. இந்த விஷயத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தலையிட்டு, இலங்கை செல்லும் நடிகர் நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ‘முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை புறக்கணிப்போம்’ என அமெரிக¢க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் ‘காவல் காதல்’. இதில் அசின் நடித்துள்ளார். தமிழ் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டுகின்றன. இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் அஜீத் இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போல இணையதளத¢தில் தகவல்கள் பரவின. அவரது படத்தை புறக்கணிப்பதாக வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் அறிவித்தன. அஜீத் விளக்கம் தந்தார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்திலும் பங்கேற்றார். இதையடுத்து அவர் படங்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments poopathi:
படம் நன்றாக இருந்தால் ஓடும் அவ்வளவுதான். வெளிநாடுகளில் தமிழ் படங்களை வைத்து வியாபாரம் (திருட்டு காப்பிகள் உட்பட) செய்பவர்கள் எல்லாம் முன்னாள் புலி விசுவாசிகளே. அவர்களது கொள்கைகள் எல்லாம் கடைசியில் பணத்தில் பொய் நிற்கும். எதில் அதிக லாபமோ அதில் பெரிய விசுவாசி போல் காட்டிக்கொள்வார்கள். அவர்களது புலிவிசுவாசம்கூட மிக நிச்சயமான சுயநலத்தை அடிப்படையாக கொண்டதே. சரியாக சொல்லப்போனால் அதிகமான அறியாமையில் மிதந்தவர்களும் படு சுயநலமான நோக்கம் கொண்டவர்க்களும்தான் அதிகமான சத்தம் போட்டவர்கள்.
விஜய்க்கு ஒரு அட்வைஸ்: உங்கள் படம் சரியாக இருந்து ஜாதகமும் சரியாக இருந்தால் படம் ஓடும். புளிப்புச்சாண்டி காட்டுபவர்கள் எதோ உங்களிடம் இருந்து காசு கறக்கும் நோக்கத்தில் கத்துவது போல் தெரிகிறது.யாரிடமும் சமரசம் பேசவேண்டாம். மீண்டும் சொல்கிறேன்(மசாலா) படம் சரியாக இருந்தால் ஓடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக