வெயில், அங்காடித்தெரு படங்களுக்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் அரவாண் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது. இப்படத்தின் ஆரம்பவிழா இன்று கிரீன்பார்க்கில் நடந்தது.
அங்காடித்தெரு பற்றியே அதிகம் பேசினார்கள். குருநாதர் ஷங்கர் பற்றியே வசந்தபாலன் அதிகம் பேசினார். நடிகர் சிவக்குமார், ‘’வெயில் டைட்டிலே என்னை ஏதோ செய்துவிட்டது.
அந்தப்படம் மாதிரி இதுவரை வந்ததில்லை. அங்காடித்தெரு பார்த்துவிட்டு என்னால் எதுவும் பேசமுடியவில்லை.
பாலா, அமீர், சசிக்குமார், வசந்தபாலன் மாதிரி இயக்குநர்களால்தான் தமிழ்சினிமா வாழ்கிறது. ஷங்கர், லிங்குசாமி போன்ற இயக்குநர்களும் டீசண்டான படம் கொடுத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கிறார்கள்’’ என்று பேசினார்.
திருச்சி சிவா பேசும் போது, ‘’இயல்பான படைப்புகளை எடுக்கும் போது அந்தப்படைப்புகளை கொடுக்கும் படைப்பாளிக்கு சமூகம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அங்காடித்தெருவை பார்த்துவிட்டு கலைஞர், பணியில் இருக்கும் இளைஞர்கள் எல்லோரும் நல்ல விதத்தில் இருக்கிறார்களா என்று சொல்லியிருக்கிறார்’’ என்று சொன்னார்.
மதன் பேசும் போது, ‘’இந்தப்படம் ஒரு வரலாற்றுப்படமாக அமையும். ஷங்கரும் இது மாதிரி வரலாற்றுப்படங்கள் எடுக்க வேண்டும்.
பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டம். நல்ல கதையும் கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.
வசந்தபாலன் பேசும் போது, ‘’ஷங்கர் எனக்கு தாய் மாதிரி. என் வீட்டில் அம்மா, அப்பா, சகோதரர்கள் என் வெற்றியை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படித்தான் என் குருநாதர் ஷங்கர் சார் பார்க்கிறார். ஆல்பம் படத்திற்கு பிறகு செத்துக்கிடந்த என்னை வெயில் உயிர் கொடுத்ததே குருநாதர்தான்’’ என்று நெகிழ்ந்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக