ஞாயிறு, 11 ஜூலை, 2010

எல்லை மீறும் மீனவர்கள்,கடற்படையினருக்கு போக்குகாட்டிவிட்டு தொடர்ந்து மீன்பிடித்த

ராமேஸ்வரம்: தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடிச் சாதனங்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் போதிய மீன்பாடு இல்லாத நிலையில் 300 கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி அனுமதி பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இதில் இறால் மீனுக்கு சென்ற மீனவர்கள் அன்று மாலை கச்சத்தீவிற்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை இலங்கை கடல் பகுதியில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்து விரட்டியுள்ளனர். இதனால் நேற்று  நள்ளிரவிலேயே பெரும்பான்மையான படகுகள் ராமேஸ்வரம் திரும்பின. கடற்படையினருக்கு போக்குகாட்டிவிட்டு தொடர்ந்து மீன்பிடித்த படகுகளை நள்ளிரவில் வழிமறித்த இலங்கை கடற்படையினர் படகுகளை வளைத்துப்பிடித்து மீனவர்களை தாக்கி படகில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், மொபைல்போன் மற்றும் ஐஸ் பெட்டிகளுடன் இறால் மீன்களையும் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

நடுக்கடலில் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் மீன்பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பினர். காலையில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்த மீனவர்களிடம் மீன்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை தாக்கியதில் நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகிலுள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர் செல்லப்பன் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்பட்ட சம்பவம் இப்பகுதி மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக