வெள்ளி, 2 ஜூலை, 2010

எங்கே சாதி இல்லை. நான் ஒரு யாதவர். சிலர் சர்மா என்கிறார்கள். சிலர் வர்மா என்கிறார்கள்; வன்னியர்கள்

இதே நாலு பேரை வைத்து உங்களை சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்:  சென்னையில் லல்லு பேச்சு
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை அடையாறில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னாள் நடுவன் அமைச்சர்கள் லாலுபிரசாத், அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி,  முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி  ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ராஸ்டிரிய ஜனதாதளம்,  ’’இது போன்ற ஒரு கூட்டத்தை பாமகதான் முதலில் ஏற்பாடு செய்துள்ளது.  சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இதுவரை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குளப்பமான பதிலையே தருகிறார்.
பாராளுமன்றத்தில் இது பற்றி நான் எல்லோரிடமும் பேசினேன்.  இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பதில் அளித்தார் பிரதமர்.   இன்னும் முடுவு எடுக்கப்படாத நிலையில் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளார்கள்.
யானைகளை கணக்கெடுக்கிறார்கள்.  மயில்கள், சிங்கங்கள், புலிகளை கணக்கெடுக்கிறார்கள்.  என்ன சொல்வது ....மனிதர்களை மட்டும் கணக்கெடுக்க மறுக்கிறார்கள்.
இந்த ஆட்சியில் எந்த புள்ளிவிபரமும் இல்லை.  மண்டல கமிஷனின் அறிக்கையை வைத்துக்கொண்டு தோராயமாக திட்டங்களை தீட்டுகிறார்கள்.
இந்த நாட்டில் சாதி இல்லை என்கிறார்கள். எங்கே சாதி இல்லை.  நான் ஒரு யாதவர்.  சிலர் சர்மா என்கிறார்கள்.  சிலர் வர்மா என்கிறார்கள்; வன்னியர்கள் என்கிறார்கள். ஏன்...சாமி என்றுகூட சொல்கிறார்கள்.
சாதிவாரியான கணக்கெடுக்கப்பட வேண்டும்.  இதையாரும் தடுக்க முடியாது.    இதற்காக நாடுதழுவிய இயக்கம் ஒன்றை மேற்கொள்வோம்.
என்னிடம் நான்கு எம்.பிக்கள் மட்டுமே உள்ளார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள்.   சுடுகாட்டுக்கு தூக்கிச்செல்வதற்கு நாலு பேருதான் வேண்டும்.
இதே நாலு பேரை வைத்து உங்களை சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக