வியாழன், 15 ஜூலை, 2010

அசின் போனது தவறில்லை சரத்குமார், நானும் இலங்கை சென்று அவர்களை சந்திப்பேன்.

‘இந்தி சினிமா படப்பிடிப்புக்காக இலங்கைக்கு அசில் சென்றது தவறில்லை’ என்று சரத்குமார் தெரிவித்தார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தனது பிறந்த நாளையொட்டி, நேற்று காலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளத்தான் தமிழ் திரையுலக கூட்டு நடவடிக்கைக் குழு தடை விதித்திருந்தது. அதன்படி, தமிழ் திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தி சினிமா படப்பிடிப்புக்காக நடிகை அசின் இலங்கை சென்றிருக்கிறார்.
தமிழ் நடிகர், நடிகைகள் இன்றைக்கு சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறார்கள். அதனால், அவர்கள் பல மொழிகளில் நடிக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஷூட்டிங்குக்காக அசின் இலங்கை சென்றதை தவறாக கருதத் தேவையில்லை. அவர் மீது நடவடிக்கை தேவையும் இல்லை.
இதுபற்றி திரையுலக கூட்டு நடவடிக்கைக் குழுவில் பேசுவோம்.
இலங்கை தமிழர்கள் தாக்கப்பட்டபோது அந்த செயலை கண்டித்ததுடன், அப்பாவி இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியது. அங்குள்ள தமிழர்கள் எனக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். வீடு கட்டித் தரும்படி கேட்டிருக்கிறார்கள் .
அவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, வீடு கட்டித்தர வேண்டுமென்றால் இலங்கை சென்றுதான் ஆக வேண்டும். அப்படியொரு சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டிருப்பதால், நானும் இலங்கை சென்று அவர்களை சந்திப்பேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக